Thug Life Update - போடு வெடிய.. ஆண்டவர் கமல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. தக் லைஃப் ஷூட்டிங் எப்போ தெரியுமா?
சென்னை: அரசியலில் கவனம் செலுத்தியதால் திரைப்படங்களிலிருந்து ஒதுங்கியிருந்த கமல் ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்கும் அவர் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
கமல் ஹாசன் அரசியல் வாசத்துக்கு பிறகு மீண்டும் கலை வாசம் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் ரீ என் ட்ரி கொடுத்த அவர் அதில் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது.

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் படத்தை கொடுத்து பெரும் அடையாளமாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
டைட்டில் இன்ட்ரோ: இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. அதில் கமல், மணிரத்னம் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
எதையுமே சேர்த்து வைக்கலனு சொல்றாங்க.. ஆனா உண்மை வேற.. பிஜிலி ரமேஷின் சோக கதை தெரியுமா?
ரங்கராய சக்திவேல் நாயக்கன்: அதன்படி படத்தின் இன்ட்ரோ வீடியோ அன்றைய தினம் வெளியிடப்பட்டது. அதில் வெட்டவெளியில் உடல் முழுவதும் துணியை உடலில் சுற்றிக்கொண்டு நிற்கும் கமல் ஹாசன், என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. காயல்பட்டினக்காரன் என கூறுவது போன்றும் அவரை எதிரிகள் தாக்க வரும்போது அதற்கு பதில் தாக்குதல் நடத்தும்படியும் காட்சிகள் இருந்தன.படத்துக்கு தக் லைஃப் (Thug Life) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த மாத இறுதியில் ஷூடிங்கானது தொடங்கவிருப்பதாகவும்; அதற்காக கமல் ஹாசன் முழுமையாக தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக இந்தப் படத்துக்கு முன்னதாகவே ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை முதலில் தக் லைஃப் படத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் கமல் ஹாசன் - ஹெச்.வினோத் படம் உருவாகுமா உருவாகாதா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











