குட் பேட் அக்லியில் அஜித் செய்யப்போகும் விஷயம் இதுவா?.. பல வருடங்கள் கழித்து சம்பவங்கள் காத்திருக்கோ

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது எங்கே தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏகே ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அஜித்தும் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையவிருக்கும் படத்துக்கு குட் பேட் அக்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தப் படத்தில் அஜித் செய்யப்போவதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் கமிட்டானார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி படத்தை இயக்கிவருகிறார். இதுவரை மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் படங்கள் அனைத்துமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே இந்தப் படமும் கண்டிப்பாக நல்ல வரவேற்பு பெறும் என்று ஏகே ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

It has been reported that Ajith Kumar will play three characters in Good Bad Ugly

நோ அப்டேட்: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கிட்டத்தட்ட 300 நாட்களை கடந்தும் படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. வலிமை படத்தின் அப்டேட்டுக்கு எப்படி ஏகே ரசிகர்கள் காத்திருந்தார்களோ அதைவிட அதிகமாகவே காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த அப்டேட்டும் வரவில்லை. மாறாக அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

ஃபர்ஸ்ட் ஷெட்யூல் ஓவர்: அங்கு தொடங்கிய ஷூட்டிங்கில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதனையடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு சென்னை வந்த படக்குழு குட்டி ரெஸ்ட்டில் இருந்தபோது அஜித்துக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தற்போது பைக் டூர் கிளம்பியிருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருக்கின்றனர்.

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி: இதற்கிடையே விடாமுயற்சி ஷூட்டிங்கே முடியாத சூழலில் அஜித்தின் 63ஆவது படம் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவின. அதன்படி மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் அந்தப் படத்தை இயக்குவார் என்றும்; நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் அவர் நடித்தபோதே கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் என்றும் கூறப்பட்டது. இருந்தாலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

கிளாமராக ஆடினால் என்னங்க தப்பு?.. அப்படி பார்க்காதீங்க.. போட்டு பொளந்து எடுத்த நடிகை தமன்னா


இத்தனை கெட்டப்பா: இந்நிலையில் குட் பேட் அக்லியில் அஜித் ஏற்கவிருக்கும் கெட்டப் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தில் அவர் மூன்று கெட்டப்புகளில் தோன்றவிருப்பதாக சொல்லப்படுகிறது. இவற்றில் ஒரு கேரக்டர் நெகட்டிவ் ரோல் என்றும் பேச்சு எழுந்திருக்கிறது. ஏற்கனவே வரலாறு படத்தில் அஜித் மூன்று கெட்டப்புகள் ஏற்று அசத்தியிருந்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தற்போது மீண்டும் அவர் மூன்று கெட்டப்புகள் ஏற்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதால் ஏகே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். முன்னதாக இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் உருவாகியிருப்பதாக பேச்சு ஒன்று ஓடியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X