லீக்கானாலும் விஜய்யோட மாஸ் குறையல.. இதுவரை ஜன நாயகன் ப்ரீ புக்கிங்கில் இத்தனை கோடியாம்!
சென்னை: மாண்புமிகு முதலமைச்சர் விஜய் என்கிற டைட்டில் கார்டுடன் நாளை மறுநாள் ஜன நாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதமே பொங்கல் விருந்தாக வெளியாக வேண்டிய தளபதி படம் சென்சார் பிரச்னை காரணமாகவும் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவும் தாமதமான நிலையில், தற்போது சிஎம் விஜய் நடித்த ஜன நாயகனாக ஜூலை 23ம் தேதி வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் விஜய் தான் இன்று வரை பாக்ஸ் ஆபீஸ் நாயகர்களாக உள்ளனர். 500 கோடிக்கு மேல் வசூல் ஈட்டிய லிஸ்ட்டில் அஜித் குமார், சூர்யா கூட இன்னும் இணையவில்லை.

கருப்பு படத்தின் மூலம் சூர்யா 350 கோடி பாக்ஸ் ஆபீஸில் இணைந்துள்ளார். ஜன நாயகன் திரைப்படம் கருப்பு படத்தின் வசூலை முறியடிக்குமா? என்கிற கேள்வி தற்போது எழக் காரணமே அந்த படம் லீக் ஆகி கிட்டத்தட்ட 1.2 கோடி பேர் பார்த்து விட்டனர். ஆனாலும், முதல் நாளே தளபதி படத்தை தியேட்டரில் சென்று கொண்டாட வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் தியேட்டர்களை ஹவுஸ்ஃபுல் ஆக்கி வருகின்றனர்.
மாயாஜால் மொத்தமும் ஹவுஸ்ஃபுல்: ஈசிஆர் ரசிகர்களின் ஃபேவரைட் தியேட்டரான மாயாஜால் சினிமாஸ் தான் எந்தவொரு படத்தையும் முதல் நாளில் அதிகப்படியான திரைகள் மற்றும் காட்சிகளுடன் வெளியிடும். ஜன நாயகன் படத்தை முதல் நாளில் 48 ஷோக்கள் ஓட்டும் மாயாஜால் மொத்தமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக மாறியுள்ள போர்டை இப்போதே போட்டுள்ளது. ரோகிணி தியேட்டர், கமலா சினிமாஸ், காசி தியேட்டர் என பல பிரபல திரையரங்குகளும் முதல் நாள் ஷோவுக்கான மொத்த டிக்கெட்டுகளையும் விற்றுத் தீர்த்து விட்டன.
5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: ஹெச்.டி. தரத்தில் லீக்கான ஜன நாயகன் படத்தில் பெரிதாக எந்தவொரு மாற்றத்தையும் செய்யக் கூடாது என தணிக்கைக் குழு உத்தரவிட்ட நிலையில், சிறிய மாற்றங்களை மட்டுமே செய்துள்ளோம் என்றும் லீக்கான அதே படத்தைத் தான் பார்க்கப் போகிறீர்கள் என இயக்குநர் எச். வினோத் வெளிப்படையாகவே பேட்டியளித்து விட்டார். இருந்த போதிலும், இதுவரை புக் மை ஷோவில் மட்டுமே 5 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் 1.34 மில்லியன் டிக்கெட்டுகளும் விஜய்யின் லியோ திரைப்படம் 1.28 மில்லியன் டிக்கெட்டுகளும் முன்னதாக விற்று சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
15 கோடி வசூல்: ஜன நாயகன் திரைப்படம் இதுவரை தமிழ் வெர்ஷனில் மட்டும் முதல் நாளில் 5,091 ஷோக்கள் திரையிடப்படுகிறது என்றும் 4 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ள நிலையில், பிளாக் செய்யப்பட்டுள்ள ஷோக்களுடன் சேர்த்து 15.09 கோடி வசூலை இதுவரை ஈட்டியுள்ளது என சாக்னிக் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 15 கோடி வசூலை முதல் நாளில் இதுவரை அள்ளியிருப்பதாக கூறுகின்றனர். ஜன் நேத்தா என இந்தியிலும் இந்த படம் வெளியாக உள்ளது. தெலுங்கு ரசிகர்கள் பாலய்யாவின் பகவந்த் கேசரி பார்த்த நிலையில், ஜன நாயகன் படத்துக்கு வருவார்களா என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.
உலகளவில் ஓபனிங் எப்படி இருக்கும்?: லியோ படத்தின் முதல் நாள் வசூலை கூலி முறியடித்து 151 கோடி வசூலை ஈட்டியுள்ளது. அந்த பென்ச் மார்க்கை ஜனவரி 9ம் தேதி ஜன நாயகன் ரிலீஸ் ஆகியிருந்தால் முறியடித்து இருக்கும். ஆனால், லீக்கான நிலையில், உலகளவில் 60 முதல் 70 கோடி வரை ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரீ புக்கிங்கில் இதுவரை 30 கோடி வரை உலகளவில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications

