Actor Jayam Ravi: கமலால் தாமதமாகும் தனி ஒருவன் 2 பட சூட்டிங்.. என்ன பிளான் தெரியுமா?

சென்னை: நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து மினிமம் கேரன்டி ஹீரோவாக கோலிவுட்டில் நீடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த கதை தேர்வுகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. முன்னணி இயக்குநர்கள், வளர்ந்து வரும் இயக்குனர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜெயம் ரவி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இதனிடையே இந்த ஆண்டின் துவக்கத்திலேயே கடந்த 16ஆம் தேதி அவரது சைரன் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அடுத்தடுத்து அதிகமான படங்களை கைவசம் வைத்துள்ள ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜெனி காதலிக்க நேரமில்லை படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் போடப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாகத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். பவர்புல்லான வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். இந்தப் படத்தின் பலங்களாக இவை அமைந்தன.இந்நிலையில் இரண்டாவது பாகத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Jayam Ravis Thani oruvan 2 movie shooting postponed due to Kamals Thug life movie shooting it seems

நடிகர் ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான சைரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தின் கதைக்களம் சிறப்பாக அமைந்து ரசிகர்களை கவர்ந்தது. அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் கைதி என இருவேறு கெட்டப்புகளில் நடித்திருந்தார் ஜெயம் ரவி. தன்னுடைய பண்பட்ட நடிப்பால் அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

Actor Jayam Ravi: ஜெயம்ரவி இல்லாமல் நடந்து முடிந்த தனி ஒருவன் 2 பட பூஜை.. அப்டேட் இதோ!


சைரன் படம்: சிறிது நேரமே நடித்திருந்தாலும் அனுபமா பரமேஸ்வரன் இந்த படத்தில் ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கட்டிப்போட்டு உள்ளார். அதேபோல போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷும் ஸ்கோர் செய்திருந்தார். படத்தில் அப்பா -மகள் உறவு முக்கியத்துவம் தரப்பட்டு பேசப்பட்டிருந்தது. கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் பொன்னின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகி இருந்தன. இதில் பொன்னியின் செல்வன் 2 படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக கை கொடுத்தது. இந்த படத்தின் டைட்டில் கேரக்டரில் அவர் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

சொதப்பிய இறைவன் படம்: இறைவன் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான போதும் ரசிகர்களை கவர முடியாமல் சொதப்பியது. தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இதில் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் படம் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளன. இதனிடையே ஜெனி என்ற படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார். கைவசம் அதிகமான படங்களை வைத்துள்ள ஜெயம் ரவி, அடுத்ததாக தன்னுடைய அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

தனி ஒருவன் 2 படப்பூஜை: இந்த படத்தின் பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் எளிமையாக போடப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் நவம்பர் மாதத்தில் தான் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி இணைய உள்ளார். தொடர்ந்து தன் கைவசம் இருக்கும் அடுத்தடுத்த படங்களையும் முடித்துவிட்டு தனி ஒருவன் 2 படத்தில் அவர் இணையுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்க வேண்டி உள்ளதால் தனி ஒருவன் 2 படத்தின் சூட்டிங் தள்ளிப் போய் உள்ளது. இதனிடையே முன் தயாரிப்பு பணிகளில் இயக்குனர் மோகன் ராஜா தற்போது பிஸியாக ஈடுபட்டுள்ளார்.

தக் லைஃப் படத்தால் தாமதமாகும் தனி ஒருவன் 2 படம்: முன்னதாகவே தனி ஒருவன் 2 படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்களில் ஜெயம் ரவி கமிட்டானதால் சூட்டிங் தள்ளிப்போனது. தற்போது மீண்டும் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்திற்காக தனி ஒருவன் 2 படத்தின் சூட்டிங் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. அதேபோல இரண்டாம் பாகமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X