குடியை நிறுத்தினார்.. இப்போ ஆஸ்பத்திரியில் இருக்கிறார்.. அஜித் பற்றி ஷாக் கொடுத்த அந்தணன்

சென்னை: அஜித் உடல்நலக்குறைவால் அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அவரது உடல்நிலைக்கு என்ன ஆகிவிட்டது என்று அவரது ரசிகர்கள் பதைபதைத்துக்கொண்டிருக்கும் சூழலில் பத்திரிகையாளர் அந்தணன் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகவும் செய்திருக்கிறது.

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். துணிவு படம் கொடுத்த வெற்றியை இதிலும் தக்கவைத்துக்கொள்ள அவர் பணியாற்றிவருகிறார். மகிழ் திருமேனி கவனம் ஈர்த்திருக்கும் இயக்குநர் என்பதாலும்; அவர் அஜித்தை எப்படி படத்தில் காண்பிக்கப்போகிறார் என்பதை பார்க்கவும் ஏகே ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வத்தில் இருந்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி முதல் ஷெட்யூல் முடிவடைந்துவிட்டது.

Journalist Anthanan Reveals shocking things About Ajithkumar Health

மருத்துவமனையில் அனுமதி: ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துவிட்டதை அடுத்து அடுத்தக்கட்ட ஷூட்டிங் அஜர்பைஜானிலேயே தொடருமா இல்லை வேறு எங்காவது நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. படப்பிடிப்புக்கு இப்போது பிரேக் விடப்பட்டிருப்பதாக் அஜித் சென்னையில் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க நேற்று வழக்கமான பாடி செக்கப்பிற்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்தபோது அவருக்கு மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

Ajith - அறுவை சிகிச்சையா?.. நார்மல் செக்கப்பா?.. அஜித்துக்கு என்னாச்சு?..நெருக்கமானவர் கூறும் விஷயம்


அறுவை சிகிச்சை: அதனையடுத்து அவருக்கு மூன்று மருத்துவர்கள் இணைந்து அறுவை சிகிச்சை செய்ததாக பரபர தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதுகுறித்த எந்த முறையான அறிவிப்பும் இதுவரை அஜித் தரப்பிலிருந்து வரவில்லை. சூழல் இப்படி இருக்க அஜித்துக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது; அவர் இன்று மாலை வீடு திரும்புவார் என்று லேட்டஸ்ட் தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே தனது நெருங்கிய நண்பர் கலை இயக்குநர் மிலன் விடாமுயற்சி படப்பிடிப்பில் இறந்துவிட்டதை அடுத்து தன் உடல்நலம் மீது பயம் ஏற்பட்டதால்தான் அவர் இந்த செக்கப்புக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அந்தணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “அஜித்துக்கு இதயம் தொடர்பான பரிசோதனை செய்ததாக ஒரு தகவல் ஓடுகிறது. மற்றொன்று அவருக்கு சமீபகாலமாகவே லேசான தலை வலி இருந்ததாகவும் அதற்கு சிறு சிறு சிகிச்சைகள் எடுத்துக்கொண்டாலும் தலை வலி நிற்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று சோதித்தபோதுதான் அவருக்கு மூளையில் சிறு வீக்கம் இருப்பது தெரியவந்திருக்கிறது.

குணப்படுத்தக்கூடியதுதான்: இருந்தாலும் அதனை குணப்படுத்திவிடலாம் என்றுதான் மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. ஆனால் அஜித்தின் மன இறுக்கம்தான் இந்த சூழ்நிலையை அவருக்கு ஏற்படுத்தியிருப்பதாக கருதுகிறேன். இதனை குணப்படுத்திவிடலாம் என்றாலும் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்பது தெரியவில்லை. அஜித்தின் உடல்நிலையால் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போகத்தான் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

மிலன் மரணம்: மிலன் மரணமடைந்ததை அடுத்து அஜித்துக்கு தன்னுடைய உடல்நிலை மீது பயம் ஏற்பட்டது. ஏனெனில் வெளிநாட்டுக்கு செல்லும்போது அங்கிருக்கும் சீதோஷ்ண நிலை அதிகம் குடிக்க வைக்கும். அது உடலுக்குள் விளைவுகளை ஏற்படுத்தும். அதுமாதிரியான விளைவால்தான் மிலனும் உயிரிழந்தார். அஜித்துக்கு குடிக்கும் பழக்கம் இருந்தது.

ஆனால் மிலன் உயிரிழந்ததை அடுத்து மொத்தமாகவே குடி பழக்கத்தை அஜித் நிறுத்திவிட்டார். ஆனால் திடீரென மொத்தமாக நிறுத்தும்போது உடல்நிலையில் பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற சின்ன சின்ன பிரச்னைகள் சேர்ந்துதான் அஜித்துக்கு வந்ததாக சொல்கிறார்கள். அஜித் தந்தை உயிரிழப்புக்கு முதல் ஆளாக வந்தவர் விஜய்தான். அஜித் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் இருக்கிறாரோ அதற்கு தகுந்தபடி விஜய் மருத்துவமனைக்கு வந்து கண்டிப்பாக அஜித்தை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிப்பார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X