சிவகார்த்திகேயனிடம் சிக்கிய மாஸ்டர் மகேந்திரன்.. எஸ்கே இப்படி வறுத்தெடுத்துட்டாரே.. செம கலாய்

சென்னை: கோலிவுட்டில் 90களில் குழந்தை நட்சத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாஸ்டர் மகேந்திரன். நாட்டாமை உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர்; வளர்ந்த பிறகு பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. கடைசியாக 29 திரைப்படத்தில் ஒரு வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், மின்வெட்டு தொடர்பாக அவர் தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சையாகின.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்களில் மாஸ்டர் மகேந்திரனும் ஒருவர். நாட்டாமை திரைப்படத்தில் பஞ்சாயத்து சீனில் அவர் பேசிய டயலாக் இன்றுவரை ஃபேமஸ். முத்து படத்தில் ரஜினியுடன் நடனம், மின்சார கண்ணா திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்தது என அந்த காலகட்டத்தில் ரொம்பவே பிஸியாக இருந்தவர் அவர். கண்டிப்பாக வளர்ந்த பிறகும் பெரிய நட்சத்திரம் ஆவார் என்றுதான் எல்லோராலும் கணிக்கப்பட்டிருந்தது.

Master Mahendran Trolled Over Power Cut Remarks Sivakarthikeyan s Viral Roast Video Trends Again
Photo Credit:

அந்த அளவுக்கு இல்லை: ஆனால் அவரது வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தொடர்ச்சியாக அவர் இயங்கிவந்தாலும்; சினிமாவில் வரிசையாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. நல்ல நடிகர்தான் என்றாலும் அவரது ஆட்டிட்யூட்தான் அவருக்கு இடைஞ்சலாக இருக்கும் என திரைத்துறையில் பணியாற்றுபவர்கள் கூறுவது உண்டு. சிறு வயதிலேயே அப்படி இருந்தவர்; வளர்ந்த பிறகு மேற்கொண்டு ஆட்டிட்யூட் காண்பிக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் பரவின. கடைசியாக் 29 திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால் அதுவும் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை.

Also Read
படுக்கையறையில் கைவிலங்கு.. ரகசிய உறவு.. 'Sshhh 3' ஷோவில் பெட்ரூம் ரகசியங்களை ஓப்பனாக பேசிய கிரண்!
படுக்கையறையில் கைவிலங்கு.. ரகசிய உறவு.. 'Sshhh 3' ஷோவில் பெட்ரூம் ரகசியங்களை ஓப்பனாக பேசிய கிரண்!

சர்ச்சையில் சிக்கிய மகேந்திரன்: அவர் தனது பேச்சினால் தொடர்ந்து சர்ச்சைகளிலும், ட்ரோல்களிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "இவ்வளவு நாள் மின்சார தடை இல்லையா? ஜாலியாக இருந்தீர்களா?.. சரி ஆறு மாதங்கள் மின்வெட்டுடன் இருக்க முடியாதா?.. சோலார் சிஸ்டம் என்ற ஒன்றை கண்டுபிடித்தது இவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்று எனக்கு தெரியவில்லை. மின்வெட்டு இருந்தால் என்ன? ஆறு மாதங்கள் கேள்வி கேட்காதீர்கள் என சொல்கிறேன்.

மின்சாரம் வந்துவிடுமா?: என் வீட்டிலிருந்து கூட மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சோலாரிலிருந்து எப்படி லைட்டை எரிய வைக்க வேண்டும்; ஃபேனை ஓட வைக்க வேண்டும் என எனக்கு தெரியும். விஜய்யிடம் கேள்வி கேட்டால் உடனே மின்சாரம் வந்துவிடுமா?.. எத்தனை காலம்தான் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். கேள்வி மட்டும் கேட்டால் பதில் கிடைத்துவிடுமா?.. கேள்வி கேட்பதை நிறுத்தினால்தான் பதில் கிடைக்கும்" என்றிருந்தார்.

செம ட்ரோல்: மாஸ்டர் மகேந்திரனின் இந்தப் பேச்சு சோஷியல் மீடியாவில் பெரிய விவாத பொருளாக மாறியிருக்கிறது. இந்த மாதிரி ஓவராக பேசுவதால்தான் இவருக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை;அவருக்கு வீட்டில் சகல வசதிகளும் இருப்பதால் இப்படி பேசுகிறார் என சொல்லி கடுமையாக நெட்டிசன்கள் தாக்கிவருகிறார்கள்.மேலும் அவரை ட்ரோல் செய்து; அவருடைய பழைய வீடியோக்களை எல்லாம் எடுத்துப்போட்டு அடித்துவருகிறார்கள்.

வறுத்த சிவகார்த்திகேயன்: அந்தவகையில் பல வருடங்களுக்கு முன்பு அது இது எது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அவர். அதனை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். அப்போது, 'இப்போதும் உங்களை மாஸ்டர் மகேந்திரன் என்றுதான் சொல்ல வேண்டுமா?' என எஸ்கே கேட்க; மாஸ்டரோ, 'நீங்கள்தான் சொல்கிறீகள் வேறு யாரும் சொல்வதில்லை. கூப்பிடும்போது மகேந்திரன் என கூப்பிடுகிறார்கள். ஆனால் கண்டுபிடிக்கும்போது மாஸ்டர் மகேந்திரன் என்று சொல்லி கண்டுபிடிக்கிறார்கள்' என கூற; ஏன் கூப்பிட்டவுடன் போய் ஒளிந்துகொள்வீர்களா? என விடாமல் ரோஸ்ட் செய்தார் சிவா.

தொடர்ந்து, 'ஏன் உங்களை அப்படி அழைப்பவர்களிடம் நான் வளர்ந்துவிட்டேன் என சொல்ல வேண்டியதுதானே' என அடுத்த கேள்வியை போட; அதற்கு மாஸ்டரோ,'எத்தனை பேரிடம் அப்படி சொல்வது; அவர்கள் அப்படி கேட்கும்போது, 'யோவ் நான் வளர்ந்து ரொம்ப காலம் ஆகிடுச்சு என நினைத்துக்கொள்வேன்' என சொன்னார். அதையும் விடாத சிவா, 'ஓஹோ இயக்குநரை யோவ் என்றுதான் மனதில் நினைப்பீர்களோ' என போட; அய்யோ நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள் என சொல்லி நழுவிவிட்டார் மாஸ்டர் மகேந்திரன். இந்த வீடியோ இப்போது ட்ரெண்டாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X