சிம்புவை பற்றி யார் யாரோ என்னென்னமோ சொல்லிருக்காங்க.. பெப்ஸி உமா சொல்வதை கேளுங்க

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. சில நாட்களுக்கு முன்புதான் படத்தின் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்தது. இதனை முடித்துவிட்டு அஷ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி உள்ளிட்டோர் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான பெப்ஸி உமா சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிம்பு குறித்து பேசியிருப்பது இணையத்தை அதிர விட்டிருக்கிறது.

சிறு வயதிலிருந்தே நடித்து வருபவர் சிம்பு. தன்னுடைய முதல் படத்திலிருந்தே தன்னை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அடைமொழியோடு அடையாளப்படுத்தினார். வெறும் பட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டது மட்டுமில்லாமல்; ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தையும் பிடித்தார். ஆனால் அவரது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களால் சினிமாவில் அவரது கவனம் இல்லாமல் வேறு விஷயங்களுக்கு சென்றது. எனவே உடல் எடை கூடியது, படங்கள் தோல்வி என விரும்பத்தகாத பக்கத்தில் இருந்தார் எஸ்டிஆர்.

Pepsi Uma Praises Simbu - She Says STR is One Of The Most Humble Stars in Tamil Cinema
Photo Credit:

கம்பேக் தந்த சிம்பு: இனிமேலும் இப்படியே இருந்தால் அனைவரும் மறந்துவிடுவார்கள் என்பதை உணர்ந்து; வெறித்தனமான ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக்கி, மனதை சமநிலைப்படுத்தி மீண்டும் நடிக்க வந்தார். அப்படி அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. ஆனால் அடுத்து நடித்த பத்து தல, தக் லைஃப் படங்கள் எல்லாம் காலை வாரிவிட்டன.

Also Read
Gatta Kusthi 2 X Review - கட்டா குஸ்தி 2 எக்ஸ் விமர்சனம்.. படம் பாஸா? ஃபெயிலா?
Gatta Kusthi 2 X Review - கட்டா குஸ்தி 2 எக்ஸ் விமர்சனம்.. படம் பாஸா? ஃபெயிலா?

சிம்புவின் அரசன்: இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதன் ஷூட்டிங் நடந்தது. சமீபத்தில்தான் ஒரு ஷெட்யூல் ஷூட் முடிந்ததாக எஸ்டிஆரே வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தார். இந்த வருடத்துக்குள்ளேயே படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் படக்குழு இருக்கிறதாம். இந்தப் படத்துக்கு பிறகு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார் எஸ்டிஆர்.

பெப்ஸி உமா பேச்சு: இந்நிலையில் 90களில் தமிழ்நாடெங்கும் கொடி கட்டி பறந்தவர் பெப்ஸி உமா. இடையில் சில வருடங்கள் காணாமல் போயிருந்த அவர்; இப்போது மீண்டும் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்கிறார். அந்தவகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரிடம், சிம்புவின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு; அவரை பற்றி சொல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

புகழ்ந்த உமா: உடனே சிம்புவை புகழ்ந்து தள்ளிவிட்டார் பெப்ஸி உமா. அவர் பேசுகையில், "சினிமாவில் நான் பார்த்ததில் சிலர் மட்டும்தான் தலைக்கனத்தை வைத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களில் சிம்புவும் ஒருவர். ரொம்ப அடக்கமாகவும், கர்வம் தலைக்கு ஏறாமல் இருப்பவர்களில் ஒருவர். எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்" என்றார். அவரது இந்தப் பேச்சு எஸ்டிஆர் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னதாக, தமிழ்நாட்டில் வெகு பிரபலமானவராக இருந்தவர் பெப்ஸி உமா. அவர் ஆங்கரிங் செய்தே பலரது மனதை வென்றிருந்தார். ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டோருடன் எல்லாம் நடிப்பதற்கு அவர் வாய்ப்பு கிடைக்கவும் செய்ததுதான். ஆனால் நடிப்பில் ஆர்வம் இல்லாததால் ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டார். பெரிய நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையே துச்சமாக தூக்கி எரிந்துவிட்டாரே என்று அப்போதைக்கு பலரும் பரபரப்பாகவும், ஆச்சரியத்தோடும் உமா பற்றி பேசியது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X