Gatta Kusthi 2 X Review - கட்டா குஸ்தி 2 எக்ஸ் விமர்சனம்.. படம் பாஸா? ஃபெயிலா?
சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. இப்படமானது இன்று வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றிருந்ததால் இப்படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்கள்.
செல்லா அய்யாவு இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் கட்டா குஸ்தி. அதில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாகவும் நடித்திருந்தார்கள். மேலும், கருணாஸ், முனீஸ் காந்த் உள்ளிட்டோரும் நடிக்க படம் மெகா ஹிட்டானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் அனைவரிடமுமே வரவேற்பை பெற்றது. அதிலும் ஐஸ்வர்யா சண்டையிடும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் விசில் சத்தம் பறந்தது.

கட்டா குஸ்தி 2: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாவது பாகத்தை உருவாக்கினார்கள். முதல் பாகத்தில் இருந்த பலர் இதிலும் நடித்திருக்கிறார்கள். கூடுதலாக கட்டா குஸ்தி 2வில் மலையாள நடிகை மோக்ஷா உள்ளே வந்திருக்கிறார். ட்ரெய்லர் எல்லாம் பெரிய ரெஸ்பான்ஸை பெற்ற சூழலில்; இன்று அந்தப் படம் தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்நிலையில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்கள்.
எப்படி இருக்கு படம்?: படம் குறித்து பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, 'கட்டா குஸ்தி 2. விஷ்ணு விஷால் மீண்டும் செய்திருக்கிறார். இது குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். குடும்ப மதிப்புகளை உயர்த்தும் திரைப்படம். கருணாஸின் காமெடி செம ஃபன்' புகழ்ந்திருக்கிறார்.
குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்: இன்னொருவர் படம் பார்த்துவிட்டு, 'கட்டா குஸ்தி 2 வெற்றி படம். முழுக்க முழுக்க கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும் படம். குடும்பத்துடன் ரசிக்கலாம். முதல் பாதி சிறப்பு. இரண்டாவது பாதி அதைவிடவும் அசத்தல். இரண்டாவது பாதியில் காமெடி சூப்பர். கருணாஸ் வரும் காட்சிகள், டீச்சர் காமெடி, கோர்ட் சீன் எல்லாம் சிரிப்புதான். ஐஸ்வர்யா லட்சுமி தனது கேரக்டரை சிறப்பாக சுமந்திருக்கிறார்.
ஷோ ஸ்டீலர்: படத்தில் வரும் ஜாரா பாப்பாதான் படத்துடைய ஷோ ஸ்டீலர். படத்தில் முதலமைச்சர் விஜய் பற்றிய குறிப்பு இருக்கிறது. அந்தக் காட்சிக்கு தியேட்டரே அதிரும். கேமியோ தோற்றமும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. க்ளைமேக்ஸும் அருமை. மூன்றாவது பாகத்துக்கான லீடும் கொடுத்திருக்கிறார்கள். குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பட்ம்" என கூறியிருக்கிறார்.
சலிப்பே இல்லை: இன்னொருவர் தன் எக்ஸ் பக்கத்தில், 'கட்டா குஸ்தி படத்துக்கு ஐந்துக்கு 4 மதிப்பெண்கள் கொடுக்கலாம். ஆரம்பம் முதல் கடைசிவரை திரைக்கதையில் சலிப்பே இல்லை. முதல் பாகத்தில் இருந்த அத்தனை நல்ல அம்சங்களும் இதில் இருக்கின்றன. கூடுதலாக இணைந்திருக்கும் நட்சத்திரங்கள் பலம் சேர்த்திருக்கிறார்கள். விஷ்ணு விஷால் உணர்ச்சிகளுக்கு ஏற்ப தன்னுடைய நடிப்பில் சிறந்த வேரியேஷன்களை காண்பித்திருக்கிறார்.
குழந்தை நட்சத்திரம்: ஐஸ்வர்யா லட்சுமி வழக்கம்போல் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பும் அருமை. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட், லிச்சி ஆண்டனி படத்துக்கு பலமாக இருக்கிறார்கள். இயக்குநர் செல்லா அய்யாவு ஆறு வயது முதல் 60 வயது உள்ளவர்கள் ரசிக்கும் வகையில் சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஏ,பி,சி என அனைத்து சென்டர் ரசிகர்களும் படத்தை ரசிப்பார்கள்" என கொண்டாடியிருக்கிறார். இப்படி படம் பார்த்த பலரும் கட்டா குஸ்தி 2 படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
