ஜனநாயகனுக்கு சான்றிதழ் கிடைச்சாச்சு.. ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா?
சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதத்திலேயே ரிலீஸாகியிருக்க வேண்டியது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் அந்தப் படம் ரிலீஸாகவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று ஜனநாயகன் சான்றிதழை பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. எனவே ரிலீஸ் வேலைகள் எல்லாம் பரபரக்க தொடங்கியிருக்கின்றன.
விஜய் அரசியல் பிரவேசத்தை அறிவித்த பிறகு நடித்த படம் ஜனநாயகன். அதுதான் தனது கடைசி படமாக இருக்கும் என்றும் அறிவித்திருக்கிறார். இதனால் அப்படத்தின் ரிலீஸை பண்டிகை போல் கொண்டாடுவதற்கு தயாராக இருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதனையடுத்து நீதிமன்றத்துக்கும் படக்குழு சென்றது. ஆனால் அங்கேயும் உகந்ததாக எதுவும் நடக்கவில்லை.

லீக்கான படம்: பிறகு வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு; மீண்டும் படத்தை தணிக்கைக்கு அனுப்பியது பட தயாரிப்பு நிறுவனம். இது ஒருபக்கம் இருக்க; திடீரென சில மாதங்களுக்கு முன்பு முழு படமும் இணையத்தில் லீக்காகிவிட்டது. இதில் முதலில் படத்தின் எடிட்டர் மீது அனைவரும் சந்தேகப்பட்டார்கள். ஆனால் அவருக்கும், படம் லீக்கானதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உறுதியானது. பிறகு சம்பந்தப்பட்ட சிலர் அதிரடியாக கைதும் செய்யப்பட்டார்கள்.
சான்றிதழ் பெற்ற படம்: மறு தணிக்கைக்கு படம் அனுப்பப்பட்டாலும் அதிகாரிகள் படத்தை பார்க்காமல் இழுத்தடித்தார்கள். அதன் காரணமாக கிட்டத்தட்ட ஜனநாயகன் நிலைமை அவ்வளவுதான் என்றே சிலர் முடிவுக்கும் வந்துவிட்டார்கள். ஆனால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக; இன்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தை இன்று பார்த்த அதிகாரிகள்; ஏ சான்றிதழை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
எப்போது ரிலீஸ்?: படத்துக்கு சான்றிதழ் கிடைத்துவிட்டதாக தகவல்கள் வந்திருப்பதால்; இப்போது அனைவரது பார்வையும் படத்தின் ரிலீஸ் மீது இருக்கிறது. அநேகமாக இந்த மாதத்துக்குள்ளேயே படத்தை ரிலீஸ் செய்துவிடுவார்களாம்.மேலும், படத்தின் டைட்டில் கார்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என்பதை சேர்க்கவும், சி.எம் தரப்பிலிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாம். எனவே அப்படி ஸ்க்ரீனில் வரும்போது திரை தீ பிடிப்பது உறுதிதான் என்றே கருதப்படுகிறது.
ஓடிடி ரிலீஸ்?: இந்நிலையில் இன்னொரு தகவலும் ஜனநாயகன் குறித்து வெளியாகியிருக்கிறது. அதாவது, ஜூலை 24ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்பு முடிவெடுத்திருப்பதாகவும்; ஓடிடி நிறுவனமோ, ஜூலை 16ஆம் தேதி ரிலீஸ் செய்யுங்கள். அப்போதுதான் ஒரு மாதம் கழித்து சரியாக ஆகஸ்ட் 15ஆம் தேதி நாங்கள் ஓடிடியில் படத்தை வெளியிட முடியும் என செக் வைத்திருக்கிறார்களாம். இதனால் அடுத்தக்கட்ட யோசனையில் படக்குழு இருப்பதாக வலைப்பேச்சு டீம் கூறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
