குந்தவை திரிஷா பஞ்சாயத்து.. சத்தியமா எனக்கு தெரியாது.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு

சென்னை: இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தேர்தலுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் திரிஷா குறித்து பேசிய கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு திரிஷாவும் பதிலடி கொடுத்தார். மேலும் பார்த்திபனும் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இப்படி வளர்ந்துகொண்டே சென்ற விவகாரத்தை பார்த்திபன் முடித்து வைத்தார். இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் அவர்.

விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார் சங்கீதா. அவரது மனுவில் இருந்த விஷயங்கள் எல்லாம் கடந்த பிப்ரவரி மாதம் லீக்காகின. அதில், தன் கணவர் இன்னொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக குண்டை தூக்கி போட்டிருந்தார். மனு விவரங்கள் வெளியான சில நாட்களிலேயே விஜய்யும், திரிஷாவும் ஜோடியாக தயாரிப்பாளர் ஏஜிஎஸ் வீட்டு திருமணத்துக்கு மேட்சிங்காக ட்ரெஸ் போட்டுக்கொண்டு ஜோடியாக சென்றார்கள். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

Parthiban Talks about Trisha Controversy Here are Full details
Photo Credit:

பார்த்திபன் பேச்சு: பலரும் திரிஷாவுக்கு எதிரான கருத்தை வெளியிட்டார்கள். அந்தவகையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது. அவங்க வெளியே வந்தால் பிரச்னைகள் வருகின்றன' என கூறியிருந்தார். இதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "எனது பெயரையும், புகைப்படத்தையும் காட்டப்போவதாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறினார். உதவியாளர் மூலம் அந்த கோரிக்கை வந்தது.

Also Read
பார்த்திபனை திட்டிய பாக்யராஜ் அசிஸ்டெண்ட் யார்?.. அவரே சொன்ன விளக்கம்
பார்த்திபனை திட்டிய பாக்யராஜ் அசிஸ்டெண்ட் யார்?.. அவரே சொன்ன விளக்கம்

கடைசி நேரத்தில்: கடைசி நேரத்தில் எனது பெயரும், புகைப்படமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மைக்கில் ஒரு கருத்தினை கூறுவதால் அது புத்திசாலித்தனமானதாகவோ அல்லது நகைச்சுவையாகவோ மாறிவிடாது. அது முட்டாள்த்தனமாக பேசப்படுவதை இன்னும் அதிகம் கேட்க செய்யும். அறிவு இல்லாமல் மரியாதையில்லாமல் வார்த்தைகளை பேசுவது, அந்த வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறார்களோ அவர்களது குண நலனை காட்டாது. பேசுபவரின் குணநலனையே காட்டும்" என்று காட்டமாக கூறியிருந்தார்.

முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்: திரிஷாவின் அந்த எதிர்வினைக்கு பார்த்திபனும் தனது ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்திருந்தார். நாளுக்கு நாள் அந்த பிரச்னை தீவிரமடைந்துகொண்டே சென்றது. அதனையடுத்து அதற்கு பார்த்திபனே முற்றுப்புள்ளியும் வைத்துவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதுகுறித்து பேசியிருக்கிறார் அவர்.

பார்த்திபன் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "என் மனதில் என்ன தோன்றியதோ அதை நேர்மையாகவும், ஃபன்னாகவும் சொன்னேன். அது ஒன்றும் பிரச்னை ஆகாது என்று நினைத்துதான் மேடையிலிருந்து கீழே வந்தேன். ஆனால் கீழே வந்த பிறகுதான் ஒரு நண்பர் என்னிடம், 'இது பிரச்னையாகும் பாருங்கள்' என கூறினார். இது பிரச்னையாகும் என சத்தியமாக தெரியாது. மறுநாள் அதை நினைத்து ஃபீல் செய்தேன்.

தவறு என்று சொன்னேன்: பெண்கள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என நான் சொல்லியதுபோல் ஆகிவிட்டது. அது ரொம்பவே தவறு என்று புரிந்தது. அந்த ஏழு நாட்கள் க்ளைமேக்ஸ் பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்று பாக்யராஜிடம் சண்டை போட்டவன் நான். நான் சொல்லியதற்கு எதிர்வினையும் வந்தது. நான் சொல்ல வந்தது வேறு; சென்று சேர்ந்தது வேறு" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X