பிரசாந்த் இப்போதும் அதே கிரேஸோடு இருக்காரே ப்பா.. சினேகாவோடு சூப்பர் ரொமான்ஸ் நடனம்

சென்னை: தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் பிரசாந்த். பல ஹிட் படங்களில் நடித்த அவர்; 90களில் இளம் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். இப்போது டாப்பில் இருக்கும் அஜித், விஜய்யைவிடவும் உயர்ந்த இடத்தில் இருந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் அவரது மார்க்கெட் சரிவதற்கான காரணமாக அமைந்துவிட்டது. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்தவர். தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானது. அழகும், திறமையும் ஒருசேர இருந்ததாலும்; முதல் படமே மெகா ஹிட்டானதாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் படங்களாக அமைந்தன.

Prashanth Recreates His Iconic Anbe Anbe Dance Fans Say the 90s Top Star Is Still Unmatched
Photo Credit:

லெஜண்ட் இயக்குநர்களுடன்: அதனையடுத்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக இப்போது டாப் ஸ்டார்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோரைவிடவும் உயர்ந்த நிலையில் 90களில் இருந்தவர் பிரசாந்த். இன்று விஜய் அல்லது அஜித் ஆகிய இருவரின் ஒரு இடத்தை அவர்தான் பிடித்திருக்க வேண்டியவர்.

Also Read
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. உறுதி செய்த உறவினர்.. அனி வீட்டில் எப்போது விசேஷம்?
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்.. உறுதி செய்த உறவினர்.. அனி வீட்டில் எப்போது விசேஷம்?

சறுக்கிய பிரசாந்த்: இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்னைதான் என கூறப்படுகிறது. மேலும் அந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை எனவே வாய்ப்புகள் குறைந்துபோயின என்ற கூற்றும் உண்டு. மனைவி பிரச்னை மட்டுமின்றி பிரசாந்த்தின் வாழ்க்கையில் தந்தையின் தலையீடு அதிகம் இருந்ததாலும் பிரசாந்த் பாதியிலேயே காணாமல் போய்விட்டார் என்றும் திரைத்துறையில் பேச்சு உண்டு.

ரீ என்ட்ரி கொடுத்த பிரசாந்த்: சூழல் இப்படி இருக்க மீண்டும் இப்போதும் கேமரா முன் ரீ என்ட்ரி கொடுத்தார். விஜய்யுடன் கோட் படத்தில் முக்கியமான ரோலை ஏற்ற அவர்; அந்தகன் படத்தில் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையில் நடக்கும் ரியாலிட்டி ஷோ ஒன்றிலும் நடுவராக பங்கேற்றிருக்கிறார்.

சூப்பர் நடனம்: அந்த நிகழ்ச்சியில் அவருடன் சிம்ரன், சினேகா ஆகியோரும் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் நிகழ்ச்சியில் பிரசாந்த்தும், சினேகாவும் ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற அன்பே அன்பே கொல்லாதே பாடலுக்கு நடனம் ஆடினார். அப்போது 90களில் என்ன மாதிரியான கிரேஸோடு நடனம் ஆடினார்; அப்படியே அச்சு பிசகாமல் ஆடினார். அவர் நடனத்தை பார்த்து செட்டில் இருந்தவர்கள் சந்தோஷத்தில் கத்தினார்கள். மேலும் நெட்டிசன்களோ, உடல் மட்டும் கொஞ்சம் ஸ்லிம்மாக இருந்தால் இப்போதும் அவர் பெரிய ஹீரோவாக ரவுண்டு வரலாம் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X