நான் நடிச்ச ஓடாத படமெல்லாம்.. அஜித்துக்குள் இப்படி ஒரு ஹியூமரா?.. ஏகே ஃபன் செஞ்சுருக்காரு

சென்னை: அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அது உறுதியான தகவல்தான் என்றாலும்; தயாரிப்பாளர்கள் யாரும் இதுவரை அந்தப் படத்தை தயாரிக்க முன்வராததால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. இதற்கு காரணமே அஜித் கேட்கும் சம்பளத்துக்கும், அவரது மார்க்கெட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புகழ் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அஜித் நடிப்பில் கடந்த வருடத்தில் வெளியான இரண்டு படங்களுமே பெரிய அளவில் சாதிக்கவில்லை. விடாமுயற்சி அவரது மார்க்கெட்டில் ஒன்றுமே இல்லாமல் போனது. குட் பேட் அக்லியோ எதிர்பார்த்த இடத்தையும் பிடிக்கவில்லை. இதன் காரணமாக அவரது சம்பளத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்கு அவர் முதலில் 180 கோடி ரூபாய் கேட்டாராம். ஆனால் அதை கொடுக்க யாருமே தயாராக இல்லையாம்.

Pugazh Reveals Ajith s Humble Reply About His Comedy Films
Photo Credit:

எவ்வளவுதான் சம்பளம்: அதனையடுத்து 150 கோடியாக குறைத்து 110 கோடி ரூபாய்க்கு வந்து ஏகேவின் சம்பளம் இப்போது நிற்பதாகவும்; அதற்கு அவர் ஒத்துக்கொள்ளும் மனநிலையில் இருப்பதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை மெகா ப்ளாக் பஸ்டர் ஆக்கி மீண்டும் அவர் தன்னுடைய மார்க்கெட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் ஏகே ரசிகர்கள் உச்சபட்ச ஆசையை வைத்திருக்கிறார்கள்.

Also Read
Anbe Diana First Review - எழுந்து நின்று கை தட்டினேன்.. அன்பே டயானா முதல் விமர்சனம் சொன்ன பிரபலம்
Anbe Diana First Review - எழுந்து நின்று கை தட்டினேன்.. அன்பே டயானா முதல் விமர்சனம் சொன்ன பிரபலம்

தோல்வி ஒன்றும் புதிதில்லைதான்: அப்படி அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகாவிட்டாலும்; ஏகேவிடமிருந்து அவரது ரசிகர்கள் கண்டிப்பாக விலகப்போவதும் இல்லை. ஏனெனில் திரைத்துறையில் அதிக தோல்வி படங்களை கொடுத்த நடிகர்களில் அஜித்தும் ஒருவர். ஒருகாலத்தில் ஜனா, ஜி, ஆழ்வார், பரமசிவம் என வரிசையாக தோல்வி படங்களை மட்டுமே கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போதும் ரசிகர்கள் அவரது நிழலாகவே தொடர்ந்தார்கள். இப்படி ஒரு ஃபேன்ஸ் ஃபாலோயிங் கோலிவுட்டில் வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்று சொல்லலாம்.

குக் வித் கோமாளி புகழ் பேட்டி: இந்நிலையில் அஜித் குறித்து குக் வித் கோமாளி புகழ் ஒரு பேட்டியில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "அமேசான் ப்ரைமில் ஒரு ஷோ செய்துகொண்டிருந்தேன். அதில் நான்தான் டைட்டில் வின்னர். அந்த சமயத்தில் அஜித் சாரின் வலிமை பட வாய்ப்பு வந்தது. எப்படியோ அந்த ஷோ தயாரிப்பாளர்களிடம் பேசி அந்தப் படத்தில் நடித்துவிட்டேன்.வலிமை ஷூட்டிங்கிற்கு முதல்நாள் போனபோது என் கண்கள் சிவந்திருந்தன. அஜித் என்னை பார்த்தவுடன்,'கண்கள் எல்லாம் ஏன் சிவந்திருக்கின்றன' என கேட்டார்.

அஜித் சொன்னது: நேற்று ஷூட்டிங் தூங்கவில்லை என சொன்னேன். சரி நீங்கள் போய் ரெஸ்ட் எடுங்கள் என்று கூறினார். தூங்கி எழுந்து வந்து நடிக்க சென்றேன். அவர் வேற லெவல். செம மனுஷன். அவரிடம் ஒருமுறை, 'ஐயா காமெடி படம் பண்ணலாமே. நானும் உங்கள்கூட நடிப்பேனே' என கேட்டேன். அதற்கு அவர், 'நிறைய படங்கள் செய்திருக்கேனே. என்னுடைய ஓடாத படமெல்லாம் காமெடி படம்தானே புகழ்' என கூறினார். அவர் உச்சக்கட்ட நடிகர். அவ்வளவு பெரிய ஜென்டில்மேன். அவர் என்னிடம் இப்படி சொல்கிறார். அவர் எப்போதும் நம்மை கம்ஃபோர்ட் ஸோனில் வைத்துக்கொள்வார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X