'ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்'... பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டிய ரஜினி....!

பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டினார்.

சென்னை: பரியேறும் பெருமாள் திரைப்படம் ஒரு நாவலைப் போல எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி கரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள்.

Rajini appriciates Pariyerum perumal

திரைத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் , விமர்சகர்கள், ஊடகங்கள் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை நடிகர் ரஜினிகாந்த் நேற்று பார்த்தார். தயாரிப்பாளர் இரஞ்சித் திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.

மேலும், "ஒரு நாவலைப்போல திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். பல இடங்களில் நான் சிலிர்த்துவிட்டேன், மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தனது பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார்.

[குழந்தையை கொஞ்சி மகிழும் விஜய்... வைரலாக பரவும் க்யூட் வீடியோ!]

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயனும் பரியேறும் பெருமாள் படத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இதயத்தில் நிலைத்து நிற்கும் திரைப்படம் பரியேறும் பெருமாள். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தை இயக்குனர் ஷங்கர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X