இது ”பேட்ட” யா படையப்பாவா... ரஜினி இவ்ளோ யூத்தா இருக்காரே..?

பேட்ட படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த் போட்டோ வெளியாகியுள்ளது

Recommended Video

ரஜினி இவ்ளோ யூத்தா இருக்காரே..?- வீடியோ

லக்னோ: ரஜினிகாந்த் இளைமையோடு காட்சியளிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது உத்திரப்பிரதேச தலைநகரான லக்னோவில் நடைபெற்று வருகிறது.

Rajinikanth “Petta” look revealed!

கடந்த சில வாரங்களாக படக்குழுவினர் லக்னோவில் முகாமிட்டுள்ள நிலையில், தற்போது ரஜினிகாந்த் செம ஸ்டைலாக இளைமை தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கபாலி திரைப்படத்தில் நரைத்த தாடியோடு காட்சியளித்தாலும், முள்ளும் மலரும் படம் வெளியான காலகட்டங்களில் இருந்த ரஜினியையும் ரஞ்சித் காட்சிப்படுத்தினார். அது மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தது.

[ தமிழ்ப்பெண்கள் யாரிடமும் தோற்கக்கூடாது.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கொந்தளிக்கும் ஆர்த்தி! ]

இப்போது "பேட்ட" திரைப்படத்தில் படையப்பா மற்றும் பாபா படங்களில் வந்ததுபோன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கரு கருவென இருக்கும் இரண்டு நாள் தாடியுடன் பச்சை நிற டீ ஷர்ட், கோட் கூலர்ஸ் என செம கூலாக இருக்கிறார் ரஜினிகாந்த். படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டுள்ளனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, சனட் ரெட்டி, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X