தமிழ்ப்பெண்கள் யாரிடமும் தோற்கக்கூடாது.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கொந்தளிக்கும் ஆர்த்தி!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தமிழ்ப்பெண்களுக்கு வாக்களிக்க வேண்டுமென ஆர்த்தி கோரியுள்ளார்.

Recommended Video

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக கொந்தளிக்கும் ஆர்த்தி!

சென்னை: நடிகை ஆர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பொங்கி எழுந்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. அவர் இப்போது சில படங்களில் நடித்து வருகிறார். தமிழ்ப்பெண்களுக்குத் தான் வாக்களிக்க வேண்டுமென்று ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.

Harathi seek support for Tamil women in Biggboss!

பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பம் முதலே சுவாரஸ்யம் இல்லாமல் தான் போய்க்கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் இப்போது ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி மற்றும் ஐஸ்வர்யா மட்டுமே உள்ளனர்.

இந்த நால்வரில் ஐஸ்வர்யாவுக்குத்தான் டைட்டில் வின்னராவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அப்படியே இல்லை என்றாலும் அவரைத்தான் வெற்றிபெற வைப்பார்கள், அதற்காக பிக்பாஸ் சூழ்ச்சி செய்கிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றன. அதை மெய்ப்பிக்கும் வகையில், நேற்று எல்லோருக்குமான க்யூட் மொமெண்ட்ஸ் ரீவைண்ட் போடும்போதும் ஐஸ்வர்யாவை விரும்பும் வகையிலான காட்சிகள் அதிகம் ப்ளே செய்யப்பட்டன.

இந்த நிலையில், நகைச்சுவை நடிகை ஆர்த்தி, ஐஸ்வர்யாவை சப்போர்ட் பண்றவங்க உங்களோட வச்சிக்கோங்க. அவங்களப் பத்தி நிறையவே தெரியும். மீறி தானா வந்து கதறுபவர்கள் பிளாக் செய்யப்படுவீர்கள் என இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டமாக ட்வீட் செய்திருந்தார்.

நேற்று, "நம் தமிழ்ப் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது.. இவர்களுக்குள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள். ஆனால் இவர்களுக்கு மட்டுமே! நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளர்களாக கொண்டாடுவோம்!" என ட்வீட் செய்துள்ளார். இப்படி தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்கும் போதுதான் ஓட்டுக்கள் பிரிந்து ஐஸ்வர்யா வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக ஃபில்மிபீட்டிலேயே செய்தி வெளியிட்டோம். அதையே பலரும் கூறிவருகின்றனர். இந்த நிலையில் ஆர்த்தி இவ்வாறு கொந்தளித்துள்ளார்.

ஆர்த்தியின் கொந்தளிப்பிற்கு ஐஸ்வர்யா தத்தாவின் மேனேஜர் என இருக்கும் ட்விட்டர் ஐடியிலிருந்து காட்டமான பதில் வந்திருக்கிறது. அஜித்தை ரித்விகாவுடன் நடிக்க சொல்லுங்கள் எதற்கு மும்பையிலிருந்து ஹீரோயின் என்றெல்லாம் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

[ ரஜினியுடன் மோதும் அஜித்... பொங்கல் நமக்கு செம எண்டர்டெயின்மெண்ட் தான்! ]

எது எப்படியோ தமிழ்ப் பெண்கள் vs ஐஸ்வர்யா தத்தா என மோதவிட்டு அவர்கள் டிஆர்பி-ஐ அள்ளுகிறார்கள் என்பது நிச்சயம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X