முன்னாடியே கணிப்பதில் எப்போதும் கமல் கில்லிதான்.. வேற லெவலில் கெஸ் செஞ்சுருக்காரே ப்பா!

சென்னை: கமல்ஹாசன் இப்போது பிஸியாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அவர்கள் இளமையான இயக்குநர்கள் என்பதால்; கமலை வைத்து தரமான செய்கை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது.

அரசியல் தளத்துக்கு சென்ற கமல்ஹாசனுக்கு அங்கு பெரிய அளவில் சௌகரியங்கள் இல்லை. அதனையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்து; தனது ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வசூலில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது.

Ramji Reveals How Kamal Haasan Gave Him His First Acting Chance
Photo Credit:

சீனியர் இயக்குநர்களுடன்: விக்ரம் கொடுத்த வெற்றி கமலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அந்த உற்சாகத்தோடு சீனியர் இயக்குநரான ஷங்கருடன் இந்தியன் 2 படத்தில் இணைந்தார். முதல் பாகம் போன்றே இதுவும் ஹிட்டாகும் என்று எதிர்பார்த்தால்; படம் பாதாளத்தில் விழுந்துவிட்டது. சரி இந்தியன் 2தான் மோசம் செய்துவிட்டது; மணிரத்னமாவது காப்பாற்றுவார் என எண்ணி தக் லைஃப் படத்தில் நடித்தார்.

Also Read
கொண்டையை போட்டுக்கொண்டு களத்தில் குதித்த ரச்சிதா மகாலட்சுமி.. அந்த நேரத்திலும் எவ்வளவு அழகு பாருங்க
கொண்டையை போட்டுக்கொண்டு களத்தில் குதித்த ரச்சிதா மகாலட்சுமி.. அந்த நேரத்திலும் எவ்வளவு அழகு பாருங்க

இரண்டும் மோசம்தான்: ஆனால் அந்தப் படமும் அடிதான் வாங்கியது. இந்தியன் 2 போலவே தக் லைஃபையும் ட்ரோல் மெட்டீரியலாக மாற்றிவிட்டார்கள் ரசிகர்கள். சொல்லப்போனால் அவரது ஒட்டுமொத்த கரியரில் இதுவரை இந்த இரண்டு படங்கள் மாதிரி வேறு எந்த படமும் இவ்வளவு மோசமான கிண்டலையும் விமர்சனத்தையும் சந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. இதனால் உடனடியாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார் விண்வெளி நாயகன்.

இளம் இயக்குநர்களுடன் கூட்டணி: சீனியர் இயக்குநர்களை நம்பி தோல்வியை சந்தித்ததால் தனது பார்வையை இளம் இயக்குநர்கள் பக்கம் மீண்டும் திருப்பியிருக்கிறார் கமல். அந்தவகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான சண்டை பயிற்சியாளர்களாக வரும் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. நிச்சயம் இப்படம் பெரிய எற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் விண்வெளி நாயகனின் ரசிகர்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் பிரபல நடன அமைப்பாளரும், நடிகருமான ராம்ஜி சமீபத்தில் ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "சிங்காரவேலன் திரைப்படத்தில் இடம்பெற்ற, 'போட்டு வைத்த காதல் திட்டம்' பாடலில் நான் உதவி நடன அமைப்பாளராக இருந்தேன். அப்போது கமலுக்கு ஸ்டெப் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு வந்தது. அவர் என்னை ஆடிக்காட்ட சொன்னார். நான் செய்ததை பார்த்த அவர், 'இவருக்கு நடிக்க விருப்பம் இருக்கோ' என்று அருகில் இருப்பவர்களிடம் கேட்க; அவர்களும் ஆம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் வாய்ப்பு: உடனே கமல் சார், 'அதான் பார்த்தாலே தெரியுதே' என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதனையடுத்து நம்மவர் படத்தி எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். எனக்கு நடிகனாக வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தேன். நான் நடிகனாக மாறியதற்கு பிள்ளையார் சுழி போட்டது கமல் சார்தான்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X