கொண்டையை போட்டுக்கொண்டு களத்தில் குதித்த ரச்சிதா மகாலட்சுமி.. அந்த நேரத்திலும் எவ்வளவு அழகு பாருங்க
சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையில் நடித்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். அந்த நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் செய்யப்பட்ட பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அப்படி அவர் Fire, 99/66 ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களும் பெரிய அளவில் போகவில்லை என்றாலும்; ரச்சிதாவுக்கு தேவையான வெளிச்சம் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அவர் பகிர்ந்திருக்கும் வீடியோ அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்கள், ரசிகைகளிடம் சேர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. அவரை சின்னத்திரை சாவித்திரி என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள். தொடர்ச்சியாக பல சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து அனைவரது வீட்டிலும் ஒரு உறுப்பினராகவே மாறினார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அங்கே சென்ற அவர் தன்னால் முடிந்த அளவுக்கு நன்றாகத்தான் விளையாடினார்.

ராபர்ட் மாஸ்டர் சர்ச்சை: அப்போது சக போட்டியாளராக இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு ரச்சிதா மகாலட்சுமி மீது ஒரு பார்வை இருந்தது. அதனை அவர் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு போக முயன்றாலும்; ரச்சிதா அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதற்கிடையே சீரியல் நடிகர் தினேஷையும் திருமணம் செய்துகொண்டு; சில காரணங்களால் அவரை பிரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரளவு திறமையோடு விளையாடிய அவர்; பாதியிலேயே எவிக்ட்டும் ஆகிவிட்டார்.
ஃபயர் ரச்சிதா மகாலட்சுமி: பிக்பாஸ் கதவு திறந்ததை அடுத்து; ரச்சிதாவுக்கு கோடம்பாக்க கதவுகளும் திறக்க தொடங்கின. அதன்படி ஃபயர் என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் இவருடன் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோயின்கள் நடித்திருந்தார்கள். அனைவருமே அப்படத்தில் கிளாமர் காட்சிகளில் நடித்திருந்தாலும்; ரச்சிதா நடித்ததை வைத்து பெரிய விவாத போரையே சிலர் யூடியூபில் கிளப்பினார்கள். பணத்துக்காக அவர் இப்படி நடித்திருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில்; அதனை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் மகாலட்சுமி.
அடுத்த படங்கள்: ஃபயர் படத்துக்கு பிறகு அவர் 99/66 திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படமும் சரியாக போகவில்லை. அடுத்ததாக மெய் நிகரி, யூ ஆர் நெக்ஸ்ட் ஆகிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்களாவது பெரிய வெற்றி பெற்று தனக்கு மேற்கொண்டு மவுசை கூட்டிவிடுமா என்ற அதீத எதிர்பார்ப்பில் இருக்கிறார். இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
என்ன வீடியோ?: அதாவது, அவர் தன் வீட்டு அடுப்பறையில் சமையல் செய்யும் வீடியோதான் அது. சிம்ப்பிளான புடவை ஒன்றை கட்டிக்கொண்டு கொண்டையை போட்டுக்கொண்டு அழகாக சமைக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருக்கின்றன. அதுமட்டுமின்றி அந்த வீடியோவோடு, 'ஒரு காதல் என்பது' என்ற இளையராஜா பாடலை எடிட் செய்து போட்டிருக்கிறார். சமைக்கும்போதுகூட இவ்வளவு அழகாக இருக்காங்களே என்று ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டுவருகிறார்கள்.
99/66 ரச்சிதா: அப்படத்துக்கு பிறகு சில படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர்; இப்போது 99/66 என்ற படத்தில் நடித்திருக்கிறார். எம்.எஸ்.மூர்த்தி என்பவர் இயகியிருக்கிறார். இதில் சிங்கம்புலி, பவன் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நிச்சயம் இப்படம் தன்னுடைய திரைத்துறை வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மகாலட்சுமி. இந்நிலையில் அவர் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
