Nooru Sami Day 1 Box Office - 'நூறு சாமி' முதல் நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் இதுதான்

சென்னை: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க; சசி இயக்கியிருக்கும் திரைப்படம் நூறு சாமி. இவர்கள் இணைந்து ஏற்கனவே பிச்சைக்காரன் படத்தின் மூலம் சக்சஸ்ஃபுல் கூட்டணி என்ற பெயரை பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில் இப்படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது. தற்போது அதன் முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழில் பிஸியான இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி இப்போது பிஸியான நடிகர். அவர் நடிப்பில் பெரும்பாலான படங்கள் சரியாக போனதில்லை. அதேசமயம் சசியுடன் அவர் இணைந்த பிச்சைக்காரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து இப்போது மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார் விஜய். படத்துக்கு நூறு சாமி என்று பெயர் வைக்கப்பட்டது. சுவாசிகா முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்.

Nooru Sami Day 1 Box Office Collection - Vijay Antony s Movie Opens With Rs 80 Lakh
Photo Credit:

செலிபிரிட்டிகளிடம் பெரிய வரவேற்பு: இந்தப் படமானது ரிலீஸுக்கு முன்னதாகவே செலிபிரிட்டிகளிடம் பெரிய பாராட்டை பெற்றிருந்தது.அதிலும் பராசக்தி, சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சுதா கொங்கரா ரொம்பவே எமொஷனலாகி அழவும் செய்தார். இப்படி எக்கச்சக்க ஹைப்புகளை ஏற்றி வைத்து நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை ரசிகர்களும் ஆவலோடு தியேட்டர்களுக்கு சென்று பார்த்தார்கள்.

Also Read
மமிதா பைஜுவே மயங்குற அளவுக்கு செம ஹேண்ட்ஸமாக இருக்கும் சூர்யா.. பட்டாம்பூச்சி பறக்குது!
மமிதா பைஜுவே மயங்குற அளவுக்கு செம ஹேண்ட்ஸமாக இருக்கும் சூர்யா.. பட்டாம்பூச்சி பறக்குது!

படம் எப்படி இருக்கிறது?: மக்களுக்கும் செலிபிரிட்டிகள் போன்றே பெரும்பாலும் படம் பிடித்திருக்கிறது. சசியின் படங்கள் என்றாலே அதில் எமோஷன்களுக்கு குறைவிருக்காது. அவர் முதலில் இயக்கிய சொல்லாமலே படத்தில் தொடங்கி பல படங்களில் அந்த உணர்வுகள் பார்ப்போரை கலங்கடிக்கும். அதனாலேயே அவரது படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் எப்போதும் தங்கள் வரவேற்பை கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாசிகா சூப்பர்: அதே எமோஷன் இந்தப் படத்திலும் அபாரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. கணவரை இழந்த கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்வது குறித்த கருத்தை ஆழமாகவும் அதேநேரம் எதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். படத்தின் பெரிய தூணே சுவாசிகாதான்.மொத்த படத்தையும் அவர் இரட்டை தோள்களில் தாங்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விஜய் ஆண்டனி ஸ்க்ரீனில் வரும் நேரம் குறைவாக இருந்தாலும் நிறைவான நடிப்பை வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்.

ரிப்பீட் ஆடியன்ஸ் படத்துக்கு வருவார்கள்: பெண்கள் மத்தியில் நேற்றே படத்துக்கு நல்ல ரிசல்ட் வர தொடங்கிவிட்டது. ஒரு பெண்ணெல்லாம், 'இந்தக் கதை அப்படியே என் ஃப்ரெண்டுக்கு இப்போ நடந்துட்டு இருக்கு.. என் ஃப்ரெண்ட்டின் மகளை அழைத்து வந்து இந்தப் படத்தை பார்க்க வைக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். எனவே படத்துக்கு ரிப்பீட் ஆடியன்ஸும் அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்: இந்நிலையில் அந்தப் படம் முதல் நாள் எவ்வளவு வசூலித்திருக்கிறது என்கிற தகவலை Sacnilk வலைதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று மொத்தம் 1,200 ஷோக்கள்வரை திரையிடப்பட்டு மொத்தம் 80 லட்சம் வரை வசூலித்திருக்கிறதாம். சசி படம் முதல் நாளே ஒரு கோடி ரூபாய் வசூலை நெருங்கியிருப்பதும் பாசிட்டிவ் சிக்னல்தான்.

குடும்பங்கள் மத்தியில் படத்துக்கு மவுசு உயர்ந்துவிட்டதாலும்; இன்றும், நாளையும் விடுமுறை என்பதாலும் கண்டிப்பாக அவர்கள் படத்துக்கு வருவார்கள். நிச்சயம் இன்றிலிருந்து வசூல் இன்னும் வேகமெடுக்கும் என கருதப்படுகிறது. முதல் நாளே பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்திருப்பதால் படக்குழுவும் ஹேப்பியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X