பெர்சனல் வாழ்க்கையில் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.. இனி புதிய தொடக்கம்.. ரவி மோகன் உறுதி
சென்னை: ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் ரவி மோகன்; அவரை பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார். அதனையடுத்து கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் அந்த உறவும் பாதியில் முடிந்ததாக தெரிகிறது. மேலும், சமீபத்தில் தன் வீட்டு பணியாட்களை ரவி வீட்டில் அடைத்து வைத்திருந்ததும் பரபரப்பை கிளப்பியது. கிசுகிசுக்களும், சர்ச்சைகளும் அண்டாமல் இருந்த ரவி; இப்போது அவைகளுக்கு மத்தியில்தான் வாழ்ந்தே வருகிறார்.
ஆர்த்தியை திருமணம் செய்துகொண்ட ரவி மோகன்; சில வருடங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பி, 'எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆர்த்தியிடமிருந்து பிரிகிறேன்' என தெரிவித்திருந்தார். அதற்கு பிறகு பல விஷயங்களை ஆர்த்தி தரப்பு செய்து பார்த்தாலும்; பிரிவதில் ரவி உறுதியாக நின்றார். இதனால் அவர்களது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு இருக்கிறது. விரைவில் அவர்கள் இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெனிஷாவுடன் நெருக்கம்: ஆர்த்தியை பிரிந்த ரவி; பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருந்தார். இரண்டு பேரும் ஒரே வீட்டில் தங்கினார்கள் என்றும் கூறப்பட்டது. மேலும் ரவியின் தயாரிப்பு நிறுவன தொடக்க விழாவிலும் முன்நின்று அனைத்து வேலைகளையும் செய்தார் கெனிஷா. விரைவில் அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் இப்போது அவர்களுக்கிடையே இருந்த உறவும் முறிந்துவிட்டதாகவே தெரிகிறது.
என்ன காரணம்?: கடந்த மாதத்தில் வீடியோ வெளியிட்ட கெனிஷா, 'ரவியின் குடும்பத்தை தான் கெடுக்கவில்லை. அவரிடமிருந்து விலகுகிறேன்' என கூறினார். பிறகு ரவியும் செய்தியாளர்களை சந்தித்து, கண்ணீர் விட்டு கதறியபடி பல விஷயங்களை பேசினார். மேலும், தனக்கு ஆர்த்தி தரப்பு பில்லி சூனியம் வைத்துவிட்டார்கள் என்றும் பகீர் கிளப்பினார். கெனிஷாவை சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து ஆர்த்தி மற்றும் சுஜாதா தரப்பு மோசமாக விமர்சித்ததால்தான் அவர் ரவியிடமிருந்து பிரியும் முடிவுக்கு வந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
அடுத்த சர்ச்சை: கெனிஷாவும் இப்போது சென்னையில் இல்லை என்றே தெரிகிறது. ரவியை பொறுத்தவரை அமைதியை தேடி கோயில்களுக்கும் அடிக்கடி செல்கிறார். இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் இன்னொரு சர்ச்சை கிளம்பியது. அதாவது, தன்னுடைய வீட்டில் இரண்டரை லட்சம் ரூபாய் ரொக்கம், 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய வைர நெக்லஸை திருடிவிட்டதாக கூறி தன்னுடைய வீட்டில் பணி செய்யும் இரண்டு பெண்கள், ஒரு சிறுவனை வீட்டில் சிறை பிடித்து வைத்திருந்தார். விவரம் தெரிந்து வந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் திருடியது தெரிய வந்ததை தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
ரவி மோகனின் விளக்கம்: இப்படி ரவியின் பெர்சனல் வாழ்க்கையை சுற்றி தொடர்ந்து பிரச்னைகளும், சர்ச்சைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "எனக்கு இந்த வருடம் 46 வயது ஆகப்போகிறது. அதில் 23 வருடங்கள் சினிமாவில் இருந்திருக்கிறேன். இத்தனை வருடங்களில் நான் செய்த சின்ன தவறு உங்களை காயப்படுத்தியது. பெர்சனல் வாழ்க்கையில் கொஞ்சம் கூடுதலாக எமோஷனல் ஆகிவிட்டேன். அதற்கு பிறகு இன்டஸ்ட்ரியில் இருப்பவர்கள் என்னிடம் வந்து, 'நீ எதை வேண்டுமானாலும் சொல் ஒத்துக்கொள்கிறோம். சினிமாவில் இருக்கமாட்டேன் என சொல்லாதே' என சொன்னார்கள்.
எனது புதிய வாழ்க்கை தொடங்கும்: அப்போதிருந்து இப்போவரைக்கும் அதனை வேத வாக்காக எடுத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கிறேன். சினிமாவுக்கும், உங்களுக்கும், என்னை விரும்பும் ரசிகர்களுக்கும் எப்போதுமே துரோகம் செய்யமாட்டேன். மீண்டும் வந்துகொண்டு இருக்கிறேன். அந்த நம்பிக்கை கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பலரும் இப்போது மென்ட்டல் ஹெல்த் பற்றி பேசுகிறார்கள். அது ஒருவகையில் சந்தோஷம். என் புது வாழ்க்கை தொடங்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications
