விஜய் மகன் ஜேசன் மட்டும் ஹீரோவாகியிருந்தால்.. சந்தீப் கிஷன் ஓபன் டாக்
சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சிக்மா. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருடன் ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜூலை 31ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில்தான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்ற சூழலில்; படம் குறித்து அதன் ஹீரோ சந்தீப் கிஷன் பேசியிருக்கிறார்.
நடிகராக இருந்த விஜய் இப்போது தவெக தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறிவிட்டார். அதன் காரணமக சினிமாவிலிருந்து அவர் ஒதுங்கியும் விட்டார். இதற்கிடையே அவரது மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் இயக்கம் தொடர்பான படிப்பை படித்துவிட்டு இயக்குநராகும் முயற்சியில் இறங்கினார். அவரது முயற்சிக்கு விஜய் சைடிலிருந்து எந்த சப்போர்ட்டும் வரவில்லை என்று அப்போதே கூறப்பட்டது. பிறகு திடீரென லைகா தயாரிப்பில் சிக்மா படத்தை சஞ்சய் இயக்குவார் என்ற அறிவிப்பு வெளியானது.

சங்கீதாவின் தரப்பு காரணம்?: விஜய் செய்யாத சிலவற்றை சங்கீதா தரப்புதான் செய்ததாக கூறப்பட்டது. அதாவது லைகா நிறுவனத்துக்கும், சங்கீதா குடும்பத்துக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. அதன் காரணமாக அவர்கள் முயற்சியில்தான் சஞ்சய்க்கு இந்த வாய்ப்பு வந்ததாகவும் தகவல்கள் வட்டமடித்தன. எப்படியோ ஒப்பந்தங்கள் எல்லாம் கையெழுத்தாகி படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பித்துவிட்டார். ஹீரோவாக சஞ்சய் கிஷன் கமிட்டானார். தமன் இசையமைத்திருக்கிறார்.
சுமார் வரவேற்பை பெற்ற ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் கடந்த வருடத்தில் வெளியானது. படத்தின் கதைக்கருவாக பணம்தான் இருக்கிறது என்பதை ட்ரெய்லர் உறுதி செய்தது. மேக்கிங்கிலும் கொஞ்சம் பக்குவம் இருந்தாலும் கதைக்களத்தை பார்க்கையில் இந்தப் படம் மெகா ஹிட்டாகுமா என்ற சந்தேகத்தையும் கிளப்பியது. இருந்தாலும் கண்டிப்பாக ஹிட்டாகும் என்பது திரைத்துறையில் சிலரின் நம்பிக்கை. படமானது ஜூலை 31ஆம் தேதி ரிலீஸாகிறது.
அப்படியே அப்பா மாதிரி: சமீபத்தில்தான் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது. அதில் யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யும் சூப்பராக நடனம் ஆடியிருந்தார். அந்தப் பாடலில் அவரது மேனரிஸங்கள் அப்படியே வின்டேஜ் விஜய்யை உரித்து வைத்தது போல் இருந்தது. இந்நிலையில் படம் குறித்து ஹீரோ சந்தீப் கிஷன் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.
சந்தீப் கிஷன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "சிக்மா திரைப்படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் இது. அவர் ஹீரோவாகவே அறிமுகமாகியிருந்திருக்கலாம். அப்படி ஆகியிருந்தால் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த அறிமுக ஹீரோ என சாதனையை படைத்திருக்கலாம். ஆனால் அவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இயக்குநராகியிருக்கிறார். இந்தப் படத்தை பார்க்க எல்லோரும் ஆவலாக இருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
