கயாடு லோஹர் உடம்பை மட்டும்தான் காமிக்கிறாங்க.. விஜே பார்வதியின் அம்மா இப்படி சொல்லிட்டாங்களே

சென்னை: தமிழில் டிராகன் படத்தின் மூலம் ஃபேமஸ் அடைந்தவர் கயாடு லோஹர். அடுத்ததாக அவரது நடிப்பில் இதயம் முரளி வரவிருக்கிறது. இது தவிர்த்து இம்மார்ட்டல், மஞ்சணத்தி, சூர்யா 48 ஆகிய படங்களும் வரவிருக்கின்றன. அவர்தான் இப்போது கோலிவுட்டின் சென்சேஷனல் ஹீரோயினாக இருக்கிறார். இந்நிலையில் கயாடு லோஹர் குறித்து ஓபனாக விஜே பார்வதியின் அம்மா பேசியிருக்கிறார்.

கன்னட திரையுலகத்தில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் கயாடு லோஹர். அதற்கு பிறகு மலையாளம், தெலுங்கு, மராத்தி மொழிகளில் பிஸியான அவர்; தமிழில் டிராகன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும், கயாடு லோஹரின் அழகும் அனைவரையும் கவர்ந்துவிட; ஜென் ஸிக்களின் கனவுக்கன்னியாக மாறினார் அவர்.

VJ Parvathy Mother Criticizes Kayadu Lohar Viral Remarks Spark Debate
Photo Credit:

சர்ச்சையில் கயாடு: முதல் படத்திலேயே அவருக்கான லைம் லைட் நன்றாகவே கிடைத்தது. ஆனால் அதோடு சேர்ந்து சர்ச்சையும் எழுந்தன. அதாவது கயாடு லோஹர் ஒரு பார்ட்டியில் பங்கேற்க 35 லட்சம் ரூபாய் சார்ஜ் செய்கிறார் என கிளப்பிவிட்டார்கள். அது அவரை ரொம்பவே பாதித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பேட்டியில்கூட அதுகுறித்து மன வேதனையுடன் அவர் பேசியிருந்தது கவனிக்கத்தக்கது.

Also Read
ரம்பாவுக்கு என்ன ஆச்சு?.. நடக்க முடியாமல்.. அய்யோ இப்படி மாறிட்டாங்களே.. அந்த விபத்து காரணமா?
ரம்பாவுக்கு என்ன ஆச்சு?.. நடக்க முடியாமல்.. அய்யோ இப்படி மாறிட்டாங்களே.. அந்த விபத்து காரணமா?

அடுத்த படங்கள்: இதுமாதிரியான சர்ச்சைகள் அவரை சுற்றி எழுந்தாலும்; கயாடு பீக்கில்தான் இருக்கிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் இதயம் முரளி, இம்மார்ட்டல் வரவிருக்கின்றன. இவை தவிர்த்து சூர்யா 48 படத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மஞ்சணத்தி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அவர் கமிட்டாகியிருக்கும் அத்தனை படங்களுமே பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சோஷியல் மீடியாவிலிருந்து ரெஸ்ட்: இது ஒருபக்கம் இருக்க சோஷியல் மீடியாவிலிருந்தும் ஒதுங்கவிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் விஜே பார்வதிக்கு அவர் அளித்த பேட்டியில், "உடலுக்கு எப்படி ஓய்வு தேவைப்படுமோ அதேபோல் மனதுக்கும் ஓய்வு அவசியம். நிஜ வாழ்க்கையிலும் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். என்னை தொடர்ந்து ஆதரித்த அனைத்து ரசிகர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. நான் ஆக்டிவ்வாக இல்லாவிட்டாலும் என்னுடைய படங்கள் குறித்த தகவல்களை என் குழுவினர் பகிர்வார்கள்" என்றிருந்தார்.

விஜே பார்வதி அம்மா சொன்னது: இந்நிலையில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதாவது விஜே பார்வதி கயாடு லோஹருடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய அம்மாவிடம் காண்பிக்கிறார். அதற்கு பாருவின் அம்மாவோ, 'எனக்கு இவங்கள பிடிக்காது. வெள்ளை எலி.நடிப்பும் கிடையாது ஒன்றும் கிடையாது. சும்மா உடம்பை காட்டி நடிக்கும் பிள்ளை' என கூறினார். இதை கேட்ட விஜே பார்வதியோ அதிர்ச்சியோடு, என்ன அம்மா இப்படி சொல்லிட்ட; தமிழ்நாட்டு பசங்களோ கயாடு சைஸை பாரு என உருகுகிறார்களே என கமெண்ட் அடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X