ரம்பாவுக்கு என்ன ஆச்சு?.. நடக்க முடியாமல்.. அய்யோ இப்படி மாறிட்டாங்களே.. அந்த விபத்து காரணமா?
சென்னை: கோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்திருக்கும் அவர்; இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு விபத்தும் நடந்தது. இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
நடிகை ரம்பா 90களில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அவர் நடித்த உழவன், உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், காதலா காதலா, அருணாச்சலம் என பல படங்கள் ஹிட்டடித்தன. இதன் காரணமாக குறுகிய காலத்திலேயே அவர் டாப் நடிகைகளில் ஒருவராக மாறினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என மற்ற மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தொடை அழகி: டிராகன் படத்தின் ஒரு பாடலில் வந்த ஷாட்டிலிருந்து கயாடு லோஹரைத்தான் ஜென் ஸி கிட்ஸ் தொடை அழகி என்று வர்ணிக்கிறார்கள். ஆனால் ஓஜி தொடை அழகி என்றால் அவர் ரம்பாதான். பல பாடல்களில் அந்த அழகை வைத்தே இயக்குநர்கள் காலம் தள்ளிய கதை எல்லாம் ஒன்று உண்டு. இப்போதும் கோலிவுட்டில் தொடை அழகி என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் ரம்பாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்துகொண்ட ரம்பா: தொடர்ச்சியாக ஹீரோயினாக நடித்த அவர்; ஒருகட்டத்தில் பாடலில் மட்டும் நடனம் ஆட தொடங்கினார். அதிலும் வாய்ப்புகள் வற்றிப்போனதை அடுத்து கடந்த 2010ஆம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். குடும்பத்தோடு வெளிநாட்டில் அவர்கள் செட்டில் ஆகிவிட்டார்கள்.
விபத்தில் சிக்கிய ரம்பா: அங்கேயே இருந்து கணவரின் பிஸ்னெஸுக்கும் உறுதுணையாக இருந்தார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் தன்னுடைய குழந்தைகளுடன் சென்றபோது விபத்தையும் சந்தித்தார் ரம்பா. நல்வாய்ப்பாக யாருடைய உயிருக்கும் எதுவும் ஆகவில்லை. அதேசமயம் காரில் இருந்த அவர்கள் காயமடைந்துவிட்டார்கள். எப்படியோ அந்த விபத்திலிருந்து உடல்நலம் தேறி மீண்டும் சில பேட்டிகளிலும், ஷோக்களிலும் ரம்பாவை பார்க்க முடிந்தது.
உடைந்து போன ரம்பா: இந்நிலையில் நடிகை ரம்பாவின் புதிய வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஒரு சினிமா தொடர்பான நிகழ்வுக்கு நடக்க முடியாமல் தளர்ந்து போய் நடந்துவருகிறார். அதுமட்டுமின்றி முகம் எல்லாம் பொலிவிழந்து; கண்களில் கரு வளையம் விழுந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளிக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ, ரம்பா இப்படி மாறியதற்கு அந்த விபத்துதான் காரணமாக இருக்கும் என்று அடித்து சொல்லிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
