என் மனைவியுடன் திரிஷா.. இப்போது சொன்னால் கோபப்படமாட்டார்.. விஷ்ணு விஷால் ஓபன் டாக்

சென்னை: நடிகை திரிஷாவுகு இப்போது 43 வயது ஆகிறது. இந்த வயதிலும் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கிறார். கடைசியாக அவர் நடித்த கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் பேசியிருக்கும் விஷயம் பலரிடமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

திரிஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருக்கிறார். இடையில் ஏற்பட்ட சின்ன சறுக்கலை 96 திரைப்படத்தின் மூலம் சரி செய்துகொண்ட அவர்; தொடர்ந்து பொன்னியின் செல்வன், விடாமுயற்சி, தக் லைஃப், குட் பேட் அக்லி, கருப்பு ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் கருப்பு திரைப்படமும், குட் பேட் அக்லி திரைப்படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. குறிப்பாக கருப்பு 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

Vishnu Vishal Shares a Sweet Secret About Trisha s Pet Dog - It s My Dog Teddy s Daughter
Photo Credit:

அனைத்திலும் கவனம்: சினிமாவில் இத்தனை வருடங்களில் பல படங்களில் நடித்திருந்தாலும்; திரிஷா இப்போதும் அதே டெடிகேஷனுடன் வேலை பார்க்கிறார். தன் நடிப்பு மட்டுமின்றி தன்னுடைய அழகிலும் குறை வைக்காத அவர்; 43 வயதில் 23 வயது யுவதி போல் ஜொலிப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தியிருக்கிறது. உடலை எப்படி கட்டுக்கோப்பாக மெயின்டெயின் செய்ய வேண்டும் என்பதை அவரை பார்த்து தாராளமாக கற்றுக்கொள்ளலாம்.

Also Read
Jana Nayagan: ஜன நாயகன் சென்சார் பிரச்னை தீர்ந்ததா?.. புதிய ரிலீஸ் தேதி இப்படி தீயா பரவுதே!
Jana Nayagan: ஜன நாயகன் சென்சார் பிரச்னை தீர்ந்ததா?.. புதிய ரிலீஸ் தேதி இப்படி தீயா பரவுதே!

சர்ச்சைகளில் திரிஷா: அவரை பொறுத்தவரை சர்ச்சைகளை காலங்காலமாக சந்தித்துவருபவர்தான். ஆனாலும் சமீபமாக அவரது பெயர் விஜய் - சங்கீதா விவாகரத்து விஷயத்தில் இழுக்கப்படுவதுதான் கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது. அந்த விஷயத்தில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவரும் தெளிவாக சொல்வதில்லை; அதேசமயம் விஜய்யோடு பொதுவெளிகளுக்கு வருவது, கேக் வெட்டுவது என இருக்கிறார்.

விரும்பாத ரசிகர்கள்: விஜய்யும், திரிஷாவும் நெருங்கிய நட்பில் இருந்தாலும்; விவாகரத்து விஷயம் தலைவிரித்து ஆடும்போது இப்படியான செய்கைகள் இரண்டு பேரின் இமேஜையுமே டேமேஜ் ஆக்கும் என்பதை அவர்கள் தெரிந்தேதான் இப்படியெல்லாம் செய்கிறார்களா? இல்லை தெரியாமல் செய்கிறார்களா? என்பது யாருக்குமே தெரியவில்லை. இந்த விஷயத்துக்கு கூடிய விரைவில் முற்றுப்புள்ளி விழ வேண்டும் என்றுதான் அவரது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விஷ்ணு விஷால் பேட்டி: இந்நிலையில் திரிஷா குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்திய பேட்டியில் பேசிய விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அளித்த பேட்டியில், "நான் இதுவரைக்கும் இந்த விஷயத்தை சொன்னதே இல்லை. இப்போது திரிஷாவிடம் இருக்கும் நாய், என்னுடைய 'டெடி' என்ற செல்ல நாயின் மகள்தான். அது பூடில் இன நாய். எனது மனைவியும், திரிஷாவும் நெருங்கிய தோழிகள். இரண்டு பேரும் அடிக்கடி நாய்கள் பற்றியே பேசிக்கொள்வார்கள். இதை நான் இப்போது ஷேர் செய்துவிட்டதால் திரிஷா இதற்கு கோபப்பட மாட்டார் என்று நம்புகிறேன்" என்றார்.

நாய் மீது பாசம்: முன்னதாக, திரிஷா அடிப்படையில் நாய்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர். இப்போது அவர் வீட்டில் ஒரு நாயை வளர்த்துவருகிறார். அந்த நாய்க்கு இஸ்ஸி என்று பெயர். அதுதொடர்பான ஃபோட்டோக்கள், வீடியோக்களை எல்லாம் அடிக்கடி அவர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்வது குறிப்பிடத்தக்கது. அந்த நாயை தங்கள் வீட்டில் ஒருவராகவே வளர்த்துவருகிறார்கள் திரிஷாவும் அவரது தாயும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X