சிம்புவை வைத்து மாஸ் கமர்ஷியல் ஹிட் கொடுக்க தயாராகும் கௌதம் மேனன்

Recommended Video

தனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு- வீடியோ

சென்னை: சிம்பு கௌதம் மேனன் மற்றும் ஏஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 2018 -19 ஆண்டு யாருக்கு சிறந்ததோ இல்லையோ, நடிகர் சிம்புவுக்கு அமோகமான ஆண்டாக இருக்கப் போகிறது.

Simbu Gautam Menon and Rahman trio again!

செக்கச் சிவந்த வானம் ஹிட்டுக்குப் பிறகு அடுத்ததாக சுந்தர் சி படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபுவின் மாநாடு ஆரம்பிக்க இருக்கிறார்கள். இதற்கிடையில் கௌதம் மேனனுடன் மீண்டும் சிம்பு இணைகிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்குப் பிறகு இந்த மூவர் அணி மீண்டும் இணைகின்றது.

[ஏம்மா, பட வாய்ப்புக்காக இந்த அளவுக்கா அட்ஜஸ்ட் பண்ணுவது?]

சிம்புவை சந்தித்து கௌதம் மேனன் ஒரு மாஸ் கமர்ஷியல் கதையை சொல்லியிருக்கிறார். சிம்புவுக்கும் அது பிடித்துப்போக ஓகே சொல்லிவிட்டாராம். உடனே ரஹ்மானையும் கன்ஃபார்ம் பண்ணியிருக்கிறார் கௌதம். அதனால் சுந்தர் சி திரைப்பட வேலைகள் முடிந்தபிறகு இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

இது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் இல்லை. வேறு ஒரு புதிய கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கௌதம் மேனனும் தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் இருக்கிறார். அடுத்தமாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X