அரசன் படம் வசூலில் உலுக்கும்.. அடித்து சொல்லும் தயாரிப்பாளர்.. பாக்ஸ் ஆஃபிஸ் சம்பவம் உறுதியா?

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் திரைப்படம் அரசன். முதன்முறையாக அவர்கள் இரண்டு பேரும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு; அரசன் படம் நிச்சயம் கலக்கும் என உறுதியளித்திருக்கிறார்.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். அதற்காக டெஸ்ட் ஷூட், வெளிநாட்டில் கிராஃபிக்ஸ் பணிகள் எல்லாம் நடந்தன. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தை தொடங்க முடியவில்லை. அதனையடுத்து தாணு தயாரிப்பில் சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்க கமிட்டாகிவிட்டார் வெற்றிமாறன். இதில் விஜய் சேதுபதி, யோகலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Simbu s Arasan Will Shake The Box Office Says Producer Kalaipuli S Thanu
Photo Credit:

முதன்முறை கூட்டணி: சிம்புவும் வெற்றிமாறனும் வடசென்னை திரைப்படத்திலேயே இணைவதாக இருந்தார்கள். ஆனால் சில விஷயங்கள் ஒத்துவராததால் அதிலிருந்து எஸ்டிஆர் வெளியேற தனுஷ் உள்ளே வந்தார். இப்போது பல வருடங்கள் கழித்து சிம்புவும், வெற்றியும் இணைந்திருப்பதால் நிச்சயம் இந்தப் படம் பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை திரைத்துறையில் இருக்கிறது. முக்கியமாக, வெற்றிமாறன் படம் எடுத்தாலே அதில் சம்பவம் இருக்கும் என்பது உறுதியான ஒன்று. எனவே இதையும் அதே மாதிரி எதிர்பார்க்கலாம்.

Also Read
திரிஷாவின் ஆடையில் ஒரே நாற்றம்.. 3வது முறையாக பிரச்னையாம்.. ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க
திரிஷாவின் ஆடையில் ஒரே நாற்றம்.. 3வது முறையாக பிரச்னையாம்.. ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க

என்ன கதை?: வெற்றியின் இயக்கத்தில் வயலன்ஸ் அதிகம் இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அவரது குருநாதர் பாலுமகேந்திராவே கூட அதை பதிவு செய்திருக்கிறார். அரசன் படத்திலும் வயலன்ஸ் இருக்கும் என்றே தெரிகிறது. ஏனெனில் சென்னையில் பிரபல ரவுடியாக இருந்த மயிலை சிவாவின் வாழ்க்கையை தழுவித்தான் இந்தப் படத்தை அவர் இயக்குவதாகவும் கூறப்படுகிறது. சும்மாவே ரத்தம் தெறிக்க தெறிக்க எடுக்கும் வெற்றி; ரவுடியின் வாழ்க்கையை கண்டிப்பாக இன்னும் ராவாக காண்பிப்பார் என்றே தெரிகிறது.

ஒருவரது குட் புக்கில் ஒருவர்: அரசன் படத்தின் ஷூட்டிங் வெற்றிமாறனுக்கும், சிம்புவுக்கும் இடையே நல்ல புரிதலை உருவாக்கியிருக்கிறதாம். சிம்புவை பற்றி இன்டஸ்ட்ரியில் சொல்லப்பட்ட அத்தனையும் முழுவதும் உண்மை இல்லை என்பதை இந்த ஷூட்டிங்கில்தான் வெற்றி புரிந்துகொண்டாராம். அதேபோல் வெற்றி மீதும் சிம்புவுக்கு தனி மதிப்பு ஏற்பட; ஒருவரது குட் புக்கில் ஒருவர் இடம்பிடித்துவிட்டார்களாம். இதன் காரணமாக மீண்டும் அவர்கள் இணைந்து படம் செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதாக திரைத்துறை பட்சிகள் சொல்கின்றன.

கலைப்புலி தாணு சொன்னது: இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அரசன் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். தனியார் ஊடகத்தின் விருது விழாவில் பங்கேற்ற அவர், "நேற்று இயக்குநர் வெற்றிமாறனிடம் பேசினேன். படத்தின் செய்திகளை இயக்குநர்தான் சொல்ல வேண்டும். ஆனால் அரசன் படம் வசூலில் ஈடு இணையே இல்லத வகையில் சினிமா உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கும். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அதற்கான வேலைப்பாடு இருக்கிறது. ஈடு இணையில்லாத ஒரு வெற்றியை அந்தப் படம் பெறும்" என்றிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X