திரிஷாவின் ஆடையில் ஒரே நாற்றம்.. 3வது முறையாக பிரச்னையாம்.. ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க

சென்னை: திரிஷா நடிப்பில் இந்த வருடம் கருப்பு திரைப்படம் வெளியானது. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் 300 கோடி ரூபாய்வரைக்கும் வசூலித்தது. அடுத்ததாக விஸ்வம்பரா திரைப்படம் அக்டோபர் 16ஆம் தேதி ரிலீஸாகிறது. இவை தவிர்த்து இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் திரிஷா ஒரு ஆடை நிறுவனத்தை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி போஸ்ட் போட்டிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் திரிஷா. சிறிய கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமாகி இப்போது யாராலும் அசைக்க முடியாத இடத்துக்கு நகர்ந்திருக்கிறார் அவர். வயது 40க்கு மேல் ஆனாலும் இன்னமும் அதே எனர்ஜியோடு நடிப்பதும், அழகோடும் இருப்பதும் அனைவருக்கும் ஆச்சரியத்தைத்தா கொடுத்திருக்கிறது. இப்போதும் பெரிய ஹீரோக்களின் சாய்ஸ்களில் திரிஷாவின் பெயர் இருப்பதை வைத்தே தெரிந்துகொள்ளலாம் அவருக்கான கிரேஸ் இன்னமும் குறையவில்லை என்பதை.

Trisha Slams Zara Over Foul - Smelling Clothes - This Is The Third Time
Photo Credit:

கருப்பு மெகா ஹிட்: கடந்த வருடத்தில் திரிஷா மொத்தம் மூன்று திரைப்படங்களில் நடித்தார். மூன்றுமே பெரிய படங்கள்தான். அவற்றில் அஜித்தின் குட் பேட் அக்லி மட்டும்தான் ஓரளவுக்கு சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டடித்தது. விடாமுயற்சியும், தக் லைஃப்பும் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போயின. இருப்பினும் திரிஷாவின் நடிப்புக்கும், அழகுக்கும் அந்தப் படங்களில் ரசிகர்களிடம் அமோக ரெஸ்பான்ஸ் இருந்தது. இந்த வருடத்தில் நடித்த கருப்பு படமோ மெகா ஹிட்டாகி மொத்தம் 300 கோடி ரூபாய் வரை அள்ளியது.

Also Read
Gatta Kusthi 2 Blue Sattai Maran Review - கட்டா குஸ்தி 2 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. செம போங்க
Gatta Kusthi 2 Blue Sattai Maran Review - கட்டா குஸ்தி 2 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. செம போங்க

சர்ச்சையில் திரிஷா: அடுத்ததாக விஸ்வம்பரா திரைப்படம் வரவிருக்கிறது. இப்படி அவரது கரியர் படுபிஸியாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது பெயரோ தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குகிறது. முக்கியமாக விஜய் - சங்கீதா விவாகரத்து விஷயத்தில் திரிஷாவை பெரும்பாலானோர் திட்டி தீர்க்கிறார்கள். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளின்போதும் அவருடன் திரிஷா இருந்தார். ஆனால் அவர்களுக்குள் நெருங்கிய நட்பு மட்டுமே இருக்கிறது அதை தாண்டி வேறு எதுவும் இல்லை என்பது இரண்டு பேரின் ரசிகர்களின் கருத்தாகும்.

வேறு வழியில்லை: அதேசமயம் அவர்கள் இப்படி ஜோடியாக உலா வருவதை யாருமே உள்ளுக்குள் ரசிக்கவில்லை என்பதுதான் உண்மை. இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவர்களை விட்டுக்கொடுக்காமல் சோஷியல் மீடியாவில் காத்துவருகிறார்கள். திரிஷாவோ இதை பற்றியெல்லாம் துளியும் கவலைப்படுவதில்லை. தன்னுடைய வழக்கமான வேலைகளில் தன்னை பிஸியாக வைத்திருக்கிறார். இந்நிலையில் திரிஷாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

என்ன போஸ்ட்?: அதாவது ஸாரா ஆடை நிறுவனத்தை Tag செய்து போட்டிருக்கும் பதிவில், "வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் ஆடைகளில் உடல் நாற்றம் வீசுகிறது. இந்த வாடை லேசாகக்கூட இல்லை. தொடர்ந்து மூன்றாவது முறையாக இதே பிரச்னை நடக்கிறது. மிகவும் அருவருப்பாக இருக்கிறது. குறைந்தபட்சம் Pack செய்வதற்கு முன்பு ஆடைகளை சரிபார்த்தாவது அனுப்புங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.

Read more about: trisha திரிஷா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X