சிம்புவை இப்படி பார்த்திருக்க சான்ஸே இல்லை.. மாநாடு ஸ்பாட்டில் ரகளை செஞ்சுருக்காரு ப்பா

சென்னை: சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்துக்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே அரசன் படத்துக்குத்தான் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்நிலையில் அவரது வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

எஸ்டிஆர் என கொண்டாடப்படும் சிம்பு தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர். சினிமாவில் பல விஷயங்களை தெரிந்து வைத்திருக்கும் அவர் சில வருடங்களுக்கு முன்புவரை பெர்சனல் காரணங்களால் தடுமாறிக்கொண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு சுதாரித்த அவர் தன் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி உடல் எடையை குறைத்து மாநாடு படத்தில் தரமாக நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி நூறு கோடி ரூபாய் வசூலித்தது.

Simbu s Fun Banter With Stunt Master Silva on Maanaadu Sets Goes Viral
Photo Credit:

வெற்றிமாறனுடன் கூட்டணி சேர்ந்த சிம்பு: அடுத்ததாக அவர் நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்களில்; வெந்து தணிந்தது காடு மட்டும்தான் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். நீண்ட வருடங்களாக எதிர்பார்த்த கூட்டணி இப்போது அமைந்திருப்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Also Read
வடிவுக்கரசி பிறந்தநாள் கொண்டாட்டம்.. அம்மாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. போஸ் வெங்கட் வீட்டில் ஜாலிதான்
வடிவுக்கரசி பிறந்தநாள் கொண்டாட்டம்.. அம்மாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. போஸ் வெங்கட் வீட்டில் ஜாலிதான்

வடசென்னையிலேயே: ஏற்கனவே இந்தக் கூட்டணி வடசென்னை படத்திலேயே அமைந்திருக்க வேண்டியது. சில காரணங்களால் நடிக்கவில்லை. இப்போது அந்தக் கூட்டணி அமைந்திருப்பதால் எஸ்டிஆர் ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார்கள்.இதில் சிம்புவுடன் விஜய் சேதுபதி, யோகலட்சுமி உள்ளிட்டோர் எல்லாம் நடிகிறார்கள். கண்டிப்பாக இந்தப் படம் வசூல் சாதனை செய்யும் என தாணு நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஃபுல் ஃபார்மில் சிம்பு: அரசனுக்கு பிறகு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் எஸ்டிஆர். அரசன் மாதிரியே இந்த இரண்டு படங்களின் மீதும் அதீத ஹைப் எகிறியுள்ளது. இரண்டு இயக்குநர்களுமே இதற்கு முன்பு எடுத்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டியூட் இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்திலும் நடிக்கிறாராம்.இந்நிலையில் சிம்பு தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

என்ன வீடியோ?: அதாவது சிம்பு மாநாடு படத்தில் நடித்தபோது; அந்த ஷூட்டிங் ஸ்பாட்டி சக கலைஞர்களுடன் உரையாடிய விஷயங்கள் எல்லாம் வீடியோக்களாக கடந்த சில வாரங்களில் சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகின்றன. அந்தவகையில் இப்போதும் ஒரு வீடியோ கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்த வீடியோவில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவை எஸ்டிஆர் பயங்கரமாக கலாய்க்கிறார். அவர் என்ன சொன்னாலும் உடனடியாக கவுன்ட்டர் கொடுப்பதும், சில்வா என்ன செய்தாலும் கிண்டல் செய்வதும் என செம ஜாலியாக இருந்திருக்கிறார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X