வடிவுக்கரசி பிறந்தநாள் கொண்டாட்டம்.. அம்மாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. போஸ் வெங்கட் வீட்டில் ஜாலிதான்
சென்னை: பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானவர் வடிவுக்கரசி. ஹீரோயினாகவும், கேரக்டர் ரோலிலும், வில்லியாகவும் நடித்திருக்கும் அவர் இப்போதும் சினிமாவில் தீவிரமாக இயங்கிவருகிறார். இந்நிலையில் அவரது 68ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று நடிகர் போஸ் வெங்கட் வீட்டில் கோலாகலமாக நடைபெற்றது.
பள்ளியில் ஆசிரியையாக இருந்த வடிவுக்கரசி; குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த வேலையை விடும்படி ஆகிவிட்டது. அதனையடுத்து பாராதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் வரும் இன்ட்டெர்வ்யூ சீன் இப்போதுவரை பிரபலம். அதுவும் 90களில் வடிவுக்கரசியை பார்க்க தொடங்கியவர்களுக்கும், இப்போது பார்ப்பவர்களுக்கும்; சிகப்பு ரோஜாக்களில் வடிவுக்கரசியை பார்க்கும்போது ஆச்சரியம்தான் கிடைக்கும்.

பிஸியான நடிகை: சிகப்பு ரோஜாக்களுக்கு பிறகு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான கன்னிப்பருவத்திலே படத்தில் ஹீரோயினாக நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து ஹீரோயினாக நடித்த அவருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் மார்க்கெட் தள்ளாட தொடங்கியது. உடனடியாக தனது ரூட்டை மாற்றி கேரக்டர் ரோலிலும், வில்லி ரோலிலும் கலக்கினார். அருணாச்சலம் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த கிழவி கதாபாத்திரமும், அதற்காக அவருக்கு போடப்பட்டிருந்த மேக்கப்பும், வடிவுக்கரசியின் வில்லத்தனமான நடிப்பும் 90ஸ் கிட்ஸுக்கு பயத்தை கொடுத்தவை.
ஆச்சரியம்தான்: வில்லியாக எப்படி கலக்கினாரோ அதேபோல் பூவெல்லாம் கேட்டுப்பார், படையப்பா என பல படங்களில் கேரக்டர் ரோலிலும் நடித்தார். இப்போதும் அவர் பிஸியான நடிகையாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் இட்லி கடை, வா வாத்தியார், கான் சிட்டி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் 70களிலிருந்தே தொடர்ந்து நடித்துவருகிறார். இந்த வயதிலும் இவ்வளவு எனர்ஜியோடு இருக்கும் அவரை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள்.
வடிவுக்கரசியின் குடும்பம்: அவரது குடும்பத்தை பொறுத்தவரை முதலில் அவர் சபாபதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். ஆனால் கணவருடன் சில விஷயங்கள் ஒத்துப்போகவில்லை என்பதால் அவரை பிரிந்துவிட்டார். இப்போது தன் மகள் மற்றும் பேத்தியுடன் நிம்மதியாக வாழ்ந்துவருகிறார். இந்நிலையில் அவரது 68ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. திரைத்துறையினர், ரசிகர்கள் எல்லாம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
போஸ் வெங்கட் வீட்டில்: அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் சீரியல் மற்றும் சினிமா நடிகரான போஸ் வெங்கட் வீட்டில் நடந்தது. அவர் தன் வீட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து கேக் வெட்டுதலுக்கு ஏற்பாடு செய்து ஜமாய்த்துவிட்டார். வடிவுக்கரசியும் அங்கிருப்பவர்களை ஜாலியாக கலாய்த்துக்கொண்டே கேக் ஊட்டிவிட்டது பார்ப்பதற்கு நிறைவாக இருக்கிறது.
அதிலும் ஒருவர் தாடி, மீசை, தலைமுடியை அதிகம் வைத்திருந்ததை பார்த்து; 'ஒழுங்கா விஜய் சேதுபதி மாதிரி இருந்திருக்கலாம். இப்போ காட்டுவாசி மாதிரி இருக்க' என கலாய்க்க; அங்கிருப்பவர்கள் வெடித்து சிரித்தார்கள். இந்த வீடியோவை போஸ் வெங்கட் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
