வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஓயவேமாட்டாரா?.. வீடியோ வெளியிட்டு கதறல்

சென்னை: வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னைத்தானே புகழ்ந்துகொள்பவர் திவாகர். பிசியோதெரபிஸ்ட்டான அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல் தொடர்ந்து பிரச்னைகள் செய்வது, காவல் நிலையம் செல்வதுமாக இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் ஒரு பிரச்னையோடு வந்திருக்கிறார் அவர்.

மதுரையை சேர்ந்த திவாகர் கஜினி திரைப்படத்தில் சூர்யா தர்பூசணியை வைத்து நடித்ததை போன்றே வீடியோ செய்து வெளியிட்டு பிரபலமானார். அதனையடுத்து வியூஸ் ஏறாத யூடியூப் சேனல்கள் தொடர்ந்து அவரை பேட்டி எடுத்து பேட்டி எடுத்து ட்ரெண்டாக்கிவிட்டார்கள். அதனால் தன்னை பெரிய ஸ்டார் என்று நினைத்துக்கொண்டு வாட்டர் மெலன் ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டாபிஷேகம் நடத்திக்கொண்டார். அதனையடுத்து தொடர்ந்து வீடியோக்களை இறக்கிவந்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

Bigg Boss Fame Watermelon Star Diwakar Alleges Assault Levels Fresh Charges Against Youtube Channel
Photo Credit:

தொடர்ந்து பிரச்னைதான்: பிக்பாஸில் தாக்குப்பிடிக்காத அவர்; சில வாரங்களிலேயே எவிக்ட் ஆகிவிட்டார். அதன் பிறகு குக் வித் கோமாளிக்கு சென்று அந்த செட்டில் பிரச்னை செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தார். கானா வினோத், புகழ் உள்ளிட்டோர் மீதெல்லாம் அவர் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இப்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்ததாக கூறுகிறார். அதாவது, பேட்டிக்கு சென்ற இடத்தில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலை சேர்தவர்கள் தன்னை சிறை பிடித்துவிட்டார்கள் என வீடியோவை வெளியிட்டார்.

Also Read
பிரேசிலுடன் மோது விமலுடன் மோதாதே.. தனக்கு அடுத்து மகனை இறக்கிவிட்ட கேலக்ஸி ஸ்டார்
பிரேசிலுடன் மோது விமலுடன் மோதாதே.. தனக்கு அடுத்து மகனை இறக்கிவிட்ட கேலக்ஸி ஸ்டார்

புதிய வீடியோ: இந்நிலையில் புதிய வீடியோ ஒன்றை ரிலீஸ் செய்திருக்கிறார். அதில், "வணக்கம் தமிழக மக்களே. ப்ரோவோக் என்ற யூடியூப் சேனல் என்னை அடைத்து வைத்து தாக்கி அதை வீடியோவாக போட்டு பல லட்சம் ரூபாய் சம்பாதித்தார்கள். இதன் காரணமாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் அந்த யூடியூப் சேனலுக்கு ஆதரவாக செயல்பட்டு; என் புகாரை கிழித்துப்போட்டுவிட்டு; என் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

சென்னை கமிஷனர், டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கிறேன். சட்ட விரோதமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் முருகன் மீதும், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கீழ்ப்பாக்கம் ஜி3 காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை சோதித்தால் உண்மைகள் எல்லாம் எளிதாக வெளியே வந்துவிடும். ஏனெனில் போலீஸ் என்னை மிரட்டி சமரசம் எழுதி வாங்கினார்கள். நான் தகவல் உரிமை சட்டத்தில் போட்டு கேட்டால் அப்படி ஒரு புகாரே நான் கொடுக்கவில்லை என சொல்கிறார்கள்.

எல்லா ஆதாரங்களும்: என்னிடம் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. சட்டத்தில் தவறு செய்பவர்கள் ஒரு சின்ன ஓட்டையை வைத்துவிட்டு தப்பித்திருப்பார்கள். எனவே என்னிடம் ஆதாரம் இருக்கிறது. காவல் துறை அதிகாரிகள் மீதும், யூடியூப் சேனல் மீதும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், இந்த வாட்டர் மெலன் ஸ்டாருக்கு இதே வேலையா போச்சே; அவரை யாராவது கட்டி வைங்க ப்பா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X