என்.ஜி.கே. வுக்கு இப்படி ஒரு பிரச்சனையா? ஷூட் தொடங்குவது சூர்யா தலையில் தான் உள்ளதாம்
சென்னை: சூர்யா அண்ணாவிற்காக காத்திருக்கிறோம் என என்.ஜி.கே தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகிவரும் படம் என்.ஜி.கே. இப்படம் நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டே போவதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

குருபெயர்ச்சிக்குப் பிறகு குணமா சொல்லனும் எனக் கூறியிருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தற்போது, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கேவி ஆனந்த் படத்திற்காக சூர்யா அண்ணா தற்போது இருக்கும் தோற்றத்திலிருந்து வெளியே வந்தவுடன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. நவம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கும். அதன்பிறகு ரிலீஸ் குறித்த மற்ற அறிவிப்புகள் வெளியாகும். ஒரு சிறந்த படைப்பை உங்களுக்குத் தர காத்திருக்கிறோம் என எஸ்.ஆர்.பிரபு ட்வீட் செய்துள்ளார்.
சூர்யா 37 திரைப்படத்தில் பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். அதனால் ஷார்ட் ஹேர் லுக்கில் அவர் இருக்கிறார். என்.ஜி.கே படத்தின் மீதமுள்ள காட்சிகளை ஷார்ட் ஹேர் லுக்கில் ஷூட் செய்ய முடியாது என்பதால் எஸ்.ஆர்.பிரபு இவ்வாறு சொல்லியிருக்கிறார். அதனால் என்.ஜி.கே படத்தின் ஷூட் ஆரம்பமாவது என்பது சூர்யாவின் தலையில் தான் இருக்கிறது.
[ஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்]
சூர்யா 36 திரைப்படத்தில் ரகுல்ப்ரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக உள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











