ஸ்ரீ ரெட்டிக்கு பப்ளிக்காக சவால் விட்டுவிட்டு இப்படி பண்ணிருக்கிறாரே ராகவா லாரன்ஸ்

By Siva

Recommended Video

பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் சவால்- வீடியோ

சென்னை: ராகவா லாரன்ஸின் படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு திரையுலகில் பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.

அவர் டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

[முதலில் அமெரிக்கா.. பிறகு தமிழ்நாடு... சர்கார் ரிலீஸ் இப்படித்தான்!]

படம்

ராகவா லாரன்ஸை அவரின் வீட்டில் வைத்து சந்தித்து பேசினேன். அங்கு நிறைய குழந்தைகள் இருந்தார்கள். அவர்கள் எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். நான் ஆடிஷனில் கலந்து கொண்டேன். அவரின் அடுத்த படத்தில் என்னை நடிக்க வைக்கிறார். நல்ல கதாபாத்திரம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். அட்வான்ஸ் கூட கொடுத்தார். அந்த தொகையை புயலால் பாதிக்கப்பட்ட ஸ்ரீகாகுளம் மக்களுக்கு அளிக்கிறேன் என்று ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மீடியா

மீடியா

மீடியா என் மீது பாலியல் புகார் தெரிவித்த ஸ்ரீ ரெட்டி மீடியா முன்பு ஆடிஷனில் கலந்து கொள்ளட்டும். அவர் சிறப்பாக நடித்தால் என் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் வீட்டில் வைத்து தனியாக ஆடிஷன் நடந்துள்ளது.

வீடியோ

வீடியோ

ராகவா லாரன்ஸ் ஸ்ரீ ரெட்டிக்கு சவால் விட்ட பிறகு அவரோ ஆடிஷனுக்கு செல்லாமல் டப்ஸ்மாஷ் வீடியோக்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். என்னமா, அவரின் சவாலை ஏற்காமல் இப்படி பண்றீங்களேம்மா என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் ஆடிஷனுக்கு சென்றுள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

ஸ்ரீ ரெட்டியை கோலிவுட்டில் உள்ளவர்கள் கலாய்த்தாலும் வாய்ப்பு கொடுக்கத் தான் செய்கிறார்கள். மீ டூ இயக்கம் வேகம் எடுத்துள்ள நிலையில் ஸ்ரீ ரெட்டியின் புகார்கள் குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் விசாரணை நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X