கருப்பு வெற்றி கொடுத்த உற்சாகம்.. அந்த இயக்குநருடன் சேரும் சூர்யா?.. பட்டாசா இருக்குமே

சென்னை: சூர்யா நடிப்பில் கடந்த வருடம் வெளியான ரெட்ரோ தோல்வி படமாக அமைந்துவிட்டது. அதற்கும் முன்னதாக ரிலீஸான கங்குவாவும் பயங்கர அடி வாங்கியது. கண்டிப்பாக ஒரு ஹிட் தேவைப்படும் சூழலில் இந்த வருடம் வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனால் சூர்யா உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்நிலையில் அவரது 50வது படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ, கங்குவா ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியை தழுவின. அதனையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடிக்க கமிட்டானார். அதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்தார். முதன்முறையாக பாலாஜியும், சூர்யாவும் சேர்ந்திருந்ததால் படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. சில பிரச்னைகளை கடந்து மே மாதம் ரிலீஸானது.

Suriya 50 Nelson Dilipkumar Reportedly Set to Direct the Landmark Film
Photo Credit:

மெகா ஹிட்டான படம்: சூர்யா எதிர்பார்த்தபடியே படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மொத்தம் உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது கவனிக்கத்தக்கது. பல வருடங்கள் கழித்து சூர்யாவுக்கு இப்படி ஒரு தியேட்டரிக்கல் ஹிட் கிடைத்ததால் அவரது ரசிகர்களும், அவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இயக்குநர், கேமரா மேன், இசையமைப்பாளருக்கு காரையும் பரிசாக கொடுத்தார் சூர்யா.

Also Read
நான் முன்னாடி.. நீ பின்னாடி.. KPY பாலாவை வனிதா விஜயகுமார் இப்படி கலாய்க்கிறாங்களே?
நான் முன்னாடி.. நீ பின்னாடி.. KPY பாலாவை வனிதா விஜயகுமார் இப்படி கலாய்க்கிறாங்களே?

வெற்றி இயக்குநர்களுடன்: கருப்பு படத்தை முடித்துவிட்டு இப்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது. துல்கர் சல்மானை வைத்து லக்கி பாஸ்கர் என்ற மெகா ப்ளாக் பஸ்டர் கொடுத்தவர் வெங்கி. எனவே சூர்யாவுக்கும் தரமான ஹிட்டை கொடுப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

சூர்யா 50: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து ஜித்து மாதவன், த.செ.ஞானவேல் ஆகியோரது இயக்கத்தில் தனது 47 மற்றும் 48வது படங்களில் நடிக்கிறார். 49வது படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அநேகமாக ஆர்.ஜே. பாலாஜியாகக்கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவரது 50வது படத்தின் இயக்குநர் குறித்து புதிய தகவல் ஒன்று இப்போது வெளியாகியிருக்கிறது.

என்ன தகவல்?: அதாவது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சமீபத்தில் சூர்யாவை சந்தித்து ஒரு லைன் சொன்னதாகவும்; அந்த லைன் அவருக்கு பிடித்துவிட; டெவலப் செய்துவிட்டு வரும்படி கூறினாராம். கண்டிப்பாக 50வது படத்தை நெல்சன்தான் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் 2வுக்கு பிறகு ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார் நெல்சன். அதை முடித்துவிட்டு இந்தப் படத்துக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X