நான் முன்னாடி.. நீ பின்னாடி.. KPY பாலாவை வனிதா விஜயகுமார் இப்படி கலாய்க்கிறாங்களே?

சென்னை: விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான வனிதா; சில படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். தொடர்ந்து திருமண சர்ச்சைகளிலும் சிக்கிய அவர்; இப்போது சிங்கிளாகவே இருக்கிறார். அதுமட்டுமின்றி மிஸஸ்&மிஸ்டர் என்ற படத்தையும் இயக்கினார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அவர் கலக்கப்போவது யாரு பாலாவை கலாய்த்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இயங்கிவருபவர் விஜயகுமார். அவரது மகள்களில் ஒருவர்தான் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதற்கு அடுத்து சில படங்களில் நடித்த அவர்; முதலில் ஒரு திருமணம் செய்துகொண்டார். அந்த திருமண உறவு சில வருடங்கள் மட்டுமே நீடித்தது. அதனையடுத்து இன்னும் சில திருமணங்களை செய்த அவர்; அதுவும் ஒத்துவராததால் அதிலிருந்து உடனடியாக வெளியே வந்தார். இதன் காரணமாக அவரது பெர்சனல் வாழ்க்கை அடிக்கடி பொதுவெளியில் விவாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

You ve Acted Enough Vanitha Vijayakumar Teases KPY Bala at Movie Event
Photo Credit:

தைரியசாலி: ஆனால் வனிதாவோ அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. தன் மனதில் பட்டதை யாருக்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். அவர் அப்படி பேசியதால் சில பிரச்னைகளும் வந்திருக்கின்றன. முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டிருந்தபோது; வீட்டுக்குள் அவரது சில நடவடிக்கைகள் எல்லாம் உண்மையில் ரசிகர்களுக்கு எரிச்சலைத்தான் கொடுத்தது. டைட்டில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சென்ற அவர்; பாதியிலேயே எவிக்ட் ஆகி வெளியே வந்துவிட்டார்.

Also Read
பவர் கட் பற்றி திமிர் பேச்சு.. அவர்கள் தற்குறிகளாம்.. மாஸ்டர் மகேந்திரன் ஓவர் டாக்
பவர் கட் பற்றி திமிர் பேச்சு.. அவர்கள் தற்குறிகளாம்.. மாஸ்டர் மகேந்திரன் ஓவர் டாக்

இயக்குநர் வனிதா: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அநீதி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சூழல் இப்படி இருக்க இத்தனை வருடங்கள் நடிகையாக மட்டும் இருந்த அவர்; கடந்த வருடத்தில் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். மிஸஸ்&மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நடித்தார். ராபர்ட் மாஸ்டர் ஹீரோவாக நடிக்க; ஜோவிகா தயாரித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது. ரிலீஸுக்கு பிறகு ஓடிடியும் வாங்க முன்வராததால் யூடியூபில் படத்தை வெளியிட்டார்கள். ஆனால் அங்கேயும் படத்துக்கு பலத்த அடிதான். விமர்சன ரீதியாக பெரிய சேதாரம்தான்.

ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக லவ் ஓ லவ் திரைப்படத்தின் விழாவில் வனிதாவும், பாலாவும் கலந்துகொண்டார்கள் அப்போது, அவருக்கு பின்வரிசையில் பாலா அமர்ந்திருந்தார். உடனே வனிதா அவரை பார்த்து, 'கமெண்ட்ஸில் கேவலமாக திட்டப்போகிறார்கள். இவள் (வனிதா) முன்னாடி அமர்ந்துகொண்டு பாலாவை பின்னாடி அமர வைத்திருக்கிறாள் என சொல்வார்கள் என கூறினார். அதற்கு பாலாவோ, நான் பின்னாடியே உட்கார்ந்துகொள்கிறேன் என கூறினார். அதற்கு பதிலடி கொடுத்த வனிதா,'நீ நடித்ததெல்லாம் போதும்' என கூறினார்.

பாலாவின் லைன் அப்: முன்னதாக கலக்கப்போவது யாரு பாலா பலருக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். இந்தப் படத்தின் விழாவில்கூட கே.எஸ்.ரவிக்குமார், பாலாவை பார்த்து, நீ எம்ஜிஆரா என்று கேள்வி எழுப்பினார். பலரும் அவர் செய்யும் உதவிகள் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் நடிக்க கமிட்டாகியிருக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X