இந்த பாடலை பாடியது உங்கள் சூர்யா.. தெலுங்கிலும் ’தி ஒன்’.. பர்த்டேவுக்கு கல்யாணா பாட்டு ட்ரீட்!
சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அந்த படத்தின் அடுத்த பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யாவுக்கு பல ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெளியான கருப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் உலகளவில் கருப்பு திரைப்படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தாலும், மொத்த வசூலை முறியடிக்குமா? என்கிற கேள்வி தொடர்ந்து எழுந்துக் கொண்டே இருக்கிறது.

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் 2வது பாடலான 'தி வெட்டிங் சாங்' பாடல் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது பர்த்டே ட்ரீட்டாக ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூர்யாவின் 51வது பிறந்தநாள்: பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நீட் பிரச்னை தொடர்பாக மாணவர்கள் போராடி வருவதால் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட வேண்டாம் என முடிவெடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது பிறந்தநாள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்த பாடலை பாடியது உங்கள் சூர்யா: ஜன நாயகன் படத்துக்குப் பிறகு விஜய் இனிமேல் எந்த பாடலையும் பாட மாட்டார் என்று தெரிகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ள "தி வெட்டிங் சாங்" பாடலை தமிழ் மற்றும் தெலுங்கிலும் அவரே சொந்தக் குரலில் பாடியுள்ளார். அதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
மமிதா பைஜு செம: ஜூலை மாதம் 23ம் தேதி மமிதா பைஜு விஜய்யுடன் நடித்த ஜன நாயகன் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் சூர்யாவுடன் மமிதா பைஜு நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. முன்னதாக தனுஷ் உடன் இணைந்து அவர் நடித்த கர படம் இந்த ஆண்டு வெளியாகி பெரிதாக ஓடவில்லை. விஷ்ணு விஷால் உடன் இரண்டு வானம் படமும் இந்த ஆண்டே ரிலீஸாக காத்திருக்கிறது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெட்டிங் பாடலில் மமிதா பைஜு தனது ஆட்டத்தால் ரசிகர்களை கவர்வார் என்பது தற்போது வெளியாகி உள்ள சின்ன ப்ரோமோவிலேயே தெரிகிறது.


Click it and Unblock the Notifications

