நடிகர் விஜய் வசந்த் - நித்யா 19ல் திருமணம்

இன்றைய தேதிக்கு அதிக படங்களில் நடித்துவரும் இளம் நாயகர்களில் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்கிறார் விஜய் வசந்த்.
இவருக்கும் நித்யா என்ற பொறியியல் பட்டதாரிப் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் மே 19-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
இது பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய குடும்பத்துப் பின்னணி இருந்தாலும் இதுவரை சொந்தப்படம் எடுக்கவில்லை விஜய். இதுகுறித்துக் கேட்டால், "மக்களுக்குப் பிடித்திருந்தால் என்னை ஏற்றுக் கொள்ளட்டும். பிடிக்காதவர்களிடம் என்னைத் திணித்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்கேத்த வேடங்களில் நடித்தால் போதும் என்று நினைப்பவன். எந்த பில்டப்பும் வேணாம்..." என்கிறார் விஜய்.
இந்தத் திருமண விஷயத்தில் பெற்றோர் சொல்வதே இறுதி என்ற முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
"எனக்கு எது நல்லது கெட்டதென்று என் அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் சொல்லி தெரிந்து கொள்ளும் நிலையில் இல்லை அவர்கள்" என்கிறார் அடக்கமாக.
அட!


Click it and Unblock the Notifications











