எங்க அண்ணன் என்னை அப்படி வளர்க்கவில்லை.. ஷூட்டிங் ஸ்பாட்டில் செம கடுப்பான தனுஷ்
சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான கர திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்துவருகிறார். இதில் மம்மூட்டி, சாய் பல்லவி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில்தான் படத்தின் பெயர் அறிவிப்பு வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் குறித்து பிரபல நடிகர் சுகுமார் பகிர்ந்திருக்கும் விஷயம் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் சினிமாவில் அறிமுகமானபோது இவரெல்லாம் ஹீரோவா என்று ஏளனம் செய்யாத நபர்களே இல்லை. ஆனால் அவர் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக மாறினார். மேலும் இரண்டு முறை தேசிய விருதுகளையும் வென்று அசத்தினார். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட்டிலும் அவர் தனது தடத்தை வீரியமாக பதித்திருக்கிறார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

அடுத்த படம்: தனுஷுக்கு கடந்த சில வருடங்களாகவே பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இட்லி கடை வசூல் ரீதியாக ஓகேதான் என்றாலும் அதில் கூறப்பட்ட மைய கருத்து பிற்போக்குத்தனமானது என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடைசியாக நடித்த கர திரைப்படம்கூட தோல்வியைத்தான் சந்தித்தது. அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில்தான் படத்தின் பெயர் அறிவிப்பு வீடியோவும் வெளியானது.
ஹிட்டாகுமா ஓம்?: ராஜ்குமார் இதற்கு முன்னதாக இயக்கிய அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது. எனவே அதே போன்ற ஒரு வெற்றியை கொடுத்து; கடந்த சில வருடங்களாக தனுஷ் சந்தித்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற ஆவல் தனுஷ் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
சுகுமார் பதிவு: இந்நிலையில் தனுஷ் குறித்து காதல் சுகுமார் வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகியிருக்கிறது. திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட அனுபவம் குறித்து பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், "திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷின் ஹோம் ஒர்க்கை பார்த்து அசந்திருக்கிறேன். ஸ்பாட்டுக்கு வந்துவிட்டால் யாருடனும் கதை பேசாமல் அவர் பெர்ஃபார்மென்ஸ் செய்வதிலேயே குறியாக இருப்பார். அவ்வளவு டெடிகேஷன்.
அந்த சீன்: பிரகாஷ் ராஜ் சாருடன் மொட்டை மாடியில் ஒரே டேக்கில் பேசும் வசனம் கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் வரும். ரவுண்ட் ட்ராலி ரெடி செய்துவிட்டு தனுஷை அழைக்க உதவி இயக்குநர் கேரவனுக்கு வந்தார். சீன் பேப்பரை பார்த்ததும் டென்ஷன் ஆன தனுஷ் அந்த பேப்பரை தூக்கி போட்டுவிட்டு, 'என்ன இது நேற்றே இந்த சீன் பேப்பரை நீங்கள் கொடுத்திருக்கணும்ல.. இந்த மாதிரி ஸ்கூலில் இருந்து நான் வரவில்லை. என் அண்ணா இப்படி என்னை வளர்க்கவில்லை என கடிந்துகொண்டார்.
ஒரே டேக்தான்: ஷாட்டுக்கு என்னால் இப்போதைக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டார். இது இயக்குநருக்கும் சென்றுவிட்டது. உடனே அவர் வந்து,'இல்லை பிரதர் வேறு சீன் பிளான் செய்தோம். அது லேட் ஆகும். அதனால்தான் இதனை எடுக்கலாம்னு பார்த்தேன் என சொல்ல; தனுஷோ எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க என்றவர்.. தனியாக பத்து நிமிடங்கள் மனப்பாடம் செய்துவிட்டு ஒரே டேக்கில் அசத்திவிட்டார். தேசிய விருதுக்கு அந்த அர்ப்பணிப்புதான் அவரை அழைத்து சென்றது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
