எனக்கு அந்த நோய் இருக்கிறது.. அதனால்தான் அப்படி.. விஷ்ணு விஷால் ஓபன் டாக்

சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் இப்போது கட்டா குஸ்தி 2 திரைப்படம் உருவாகியிருக்கிறது. இப்படமானது அடுத்த மாதம் மூன்றாம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றிருப்பதால் இந்தப் படத்தின் மீதும் எக்கச்சக்க ஹைப் எகிறியிருக்கிறது. இந்நிலையில் தனக்கு இருக்கும் நோய் குறித்து பேசியிருக்கிறார் அவர். மேலும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம்,முதலில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி.சமீபத்திய என்னுடைய போஸ்ட் அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை கமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Vishnu Vishal Reveals Battle With Autoimmune Disease Shares Health Update With Fans
Photo Credit:

அந்த நோய்தான் காரணம்: சமீப காலமாக என் முகம் சோர்வாக இருப்பது போல இருப்பதை பலர் கவனித்திருக்கிறீர்கள். அதற்குக் காரணம், கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவு தான் அந்த சோர்வு ஆனால் தற்போது நான் மேற்கொண்டு வரும் இந்த சிகிச்சை என் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது.

Also Read
Nooru Sami Day 6 Box Office - நூறு சாமி 6வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸ் சுத்தமா படுத்துடுச்சே
Nooru Sami Day 6 Box Office - நூறு சாமி 6வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸ் சுத்தமா படுத்துடுச்சே

இரவு பகலாக உழைப்பு: அதே சமயம், நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும், நான் நம்பிக்கையுடன் செய்து வரும் வேலையும், மேலும் "கட்டா குஸ்தி 2" படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொருவரிடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்கின்றன. அதனால்தான் உடல்நிலை சவால்கள் இருந்தபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன்.

உற்சாகத்துடன் இருக்கிறேன்: உடல்நிலை விரைவில் குணமாகிவிடும். நீங்கள் காட்டிய அக்கறை, என்னை இன்னும் சிறப்பாக என் உடல்நலத்தை கவனித்துக்கொள்ள ஊக்குவித்துள்ளது. ஒவ்வொரு கமெண்ட்ஸ் மற்றும் கருத்துக்கும், ஒவ்வொரு ஆதரவுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இப்போது கட்டாகுஸ்தி படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் இறுதிகட்ட பணிகளில் நாங்கள் இருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன்.

காத்திருக்கிறேன்: வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் "கட்டா குஸ்தி 2" படத்தை நீங்கள் அனைவரும் கண்டுகளித்திட காத்திருக்கிறன்" என குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக முதல் திருமண உறவு முறிந்த நேரத்தில் மன உளைச்சல் காரணமாக மதுவுக்கு மொத்தமாக அடிமையாகியிருந்தார். பிறகு சுதாரித்துக்கொண்ட அவர் அதிலிருந்து மீண்டு இன்னொரு திருமணம் செய்துகொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X