அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் தேதி இதுவா?.. விரைவில் வெளியாகுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் சத்தமே இல்லாமல் ஷூட்டிங் தொடங்கி அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அஜித் கையில் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் இருக்கின்றன. விடாமுயற்சி படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருக்கிறது. அஜர்பைஜானில் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடித்த கையோடு சென்னை திரும்பிய அஜித் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது அங்கு அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறு கட்டி இருந்ததால் அந்த ஆபரேஷன் நடந்தது.

பைக் டூர்: அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அஜித்குமார் தனது மகனின் பள்ளிக்கூடத்தில் நடந்த விழா, தனது மகனுடன் ஃபுட்பால் விளையாடியது என இருந்தார். இதனையடுத்து வழக்கமாக அவர் செய்யும் பைக் டூரையும் மீண்டும் தொடங்கினார். அதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
Bijili Ramesh Death: அதிர்ச்சி.. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்
மீண்டும் ஷூட்டிங்: சூழல் இப்படி இருக்க விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்புதான் அந்த ஷெட்யூல் முடிந்தது. அதனை சுரேஷ் சந்திராவும் உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் சென்னை திரும்பிய படக்குழு இப்போது ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முகாமிட்டு மீதம் இருக்கும் காட்சிகளை எடுத்துவருவதாக கூறப்படுகிறது. அதே இடத்தில்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கும் நடப்பதாக கூறப்படுகிறது.
செம லுக்கில் அஜித்: அதேபோல் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதற்கெல்லாம் பதிலடி தரும் விதமாக அமைந்திருந்தது படத்திலிருந்து வெளியான அடுத்த போஸ்டர். அதில் அஜித் படு ஸ்மார்ட்டாக தலைமுடிக்கு டை அடித்துக்கொண்டு திரிஷாவின் பின்னால் நின்றுகொண்டிருந்தார். அடுத்தடுத்து அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸை பெற்றன. அதேசமயம் தொடர்ந்து அதே மாதிரியான போஸ்டர்கள் வெளியானதால் நெட்டிசன்கள் அதனை ட்ரோல் செய்யவும் மறக்கவில்லை.
ரிலீஸ் தேதி குறித்த தகவல்: சூழல் இப்படி இருக்க தீபாவளிக்கு விடாமுயற்சி படம் ரிலீஸாகும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தை நவம்பர் 14ஆம் தேதி அல்லது டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











