சிம்பு வருகிறாரா இல்லையா?.. ஓபனாக கேட்ட விஜய்.. சி.எம்மையே காக்க வைத்த எஸ்டிஆர்?.. என்னங்க இதெல்லாம்

சென்னை: சிம்பு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். இதற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோரின் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க நடிகர் விஜய் முதலமைச்சரானதை அடுத்து அவரை சமீபத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் அதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் பேசியிருக்கும் விஷயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறு வயதிலிருந்தே சினிமாவில் இருக்கும் சிம்பு கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களில் ஒருவர். அவருக்கு இடையே சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கம்பேக் தந்த சிம்பு; வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு, கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு ஆகிய ஹிட் படங்களில் நடித்தார். அந்தப் படங்களின் வெற்றியால் அவரது ரசிகர்கள் ரொம்பவே உற்சாகமாக இருந்தார்கள். ஆனால் அதற்கு பிறகு நடித்த பத்து தல, தக் லைஃப் படங்கள் தோல்வியடைந்து அந்த உற்சாகத்தை கம்மி செய்துவிட்டான.

Vijay Asked Is Simbu Coming - Chitra Lakshmanan Reveals Surprising Details about Their Meeting
Photo Credit:

அரசன் சிம்பு: இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன், யோகலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்க; கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் செம விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சில நாட்களுக்கு முன்புகூட தரமான சண்டை காட்சியை பீட்டர் ஹெய்னின் ஸ்டண்ட் கோரியோகிராஃபியில் இயக்கினார். அது பட்டாசாக இருக்கிறது என்றும் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

Also Read
விஜய்க்காக விஜயகாந்த் செய்தது.. மறக்காமல் நினைவுகூர்ந்த ஷோபா.. எதையும் அவங்க மறக்கல
விஜய்க்காக விஜயகாந்த் செய்தது.. மறக்காமல் நினைவுகூர்ந்த ஷோபா.. எதையும் அவங்க மறக்கல

விஜய்யை சந்தித்த சிம்பு: இதற்கிடையே சிம்பு அஜித்தின் தீவிர ரசிகராக இருந்தாலும் விஜய் மீதும் தனிப்பட்ட பாசமும் உண்டு. தேர்தல் நேரத்தில் அவருக்கு எஸ்டிஆர் வெளிப்படையான ஆதரவு கொடுக்காவிட்டாலும்; உள்ளுக்குள் அவருக்குதான் ஆதரவு கொடுத்தார் என்றும் சொல்வார்கள். சில நாட்களுக்கு முன்புகூட முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவிலும் ட்ரெண்டாகின.

சித்ரா லட்சுமணன் சொன்னது: இந்நிலையில் அந்த சந்திப்பு குறித்தும், சிம்பு குறித்தும் பிரபல பத்திரிகையாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். அதில் பேசிய அவர், "விஜய்யை அனைத்து பிரபலங்களுமே தொடர்ந்து சந்தித்துவருகிறார்கள். சிம்பு சென்று சந்தித்ததற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. அதாவது விஜய்யை சிம்பு இப்போது வீட்டில் சென்றுதான் சந்தித்தார். ஆனால் முதலில் கோட்டையில்தான் சந்திப்பதாக இருந்தார்.

ஓபனாக கேட்ட விஜய்: அதற்கான நேரமும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நேரத்துக்கு சிம்பு செல்லவில்லை. பிறகு ஒரு மணிக்கு அங்கிருப்பவர்களிடம் விஜய்யே சென்று, 'சிம்பு வருவதாக சொன்னீர்களே.. வருகிறாரா இல்லையா? அவர் வந்தால் சேர்ந்து சாப்பாடு சாப்பிடலாமே என கேட்டிருக்கிறார். அதற்கு பிறகு நான்கு மணிக்குதான் ஃபோன் செய்து, வரலாமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு பிறகுதான் விஜய் வீட்டுக்கு சென்று சந்தித்தார்" என்றார். இதை பார்த்த ரசிகர்களோ, ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவார் என்று பலரும் சொல்லிய சூழலில்; முதலமைச்சர் விஜய்யை சந்திப்பதற்கே லேட்டாகத்தான் போயிருக்கிறார் எஸ்டிஆர் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X