இவருக்கு என்ன ஆச்சு?.. இப்படி குதிக்கிறாரு?.. ஓபனாக சொன்ன விக்ரமின் மனைவி
சென்னை: சியான் என்று அன்போடு அழைக்கப்படும் விக்ரமும் ஒரு ஹிட் கிடைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அவரிடம் சென்றே உங்களுக்கு கடைசியாக எந்தப் படம் பெரிய ஹிட் என்று கேட்டால்; அவருக்கே பதில் தெரியாது. இத்தனைக்கும் ஒவ்வொரு படத்திலும் அபரிமிதமான உழைப்பை போடக்கூடியவர் அவர். இருந்தாலும் நினைத்த வெற்றி அவருக்கு இன்னமும் கிடைக்காமல் தண்ணி காட்டி வருகிறது.
நடிகர் விக்ரம் சினிமாவில் படாத கஷ்டங்கள் இல்லை. சேது படம்தான் அவருக்கு திரைத்துறையில் இன்னொரு பாதையை திறந்து வைத்தது. அப்படத்துக்கு பிறகு தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்த அவருக்கு; இப்போதெல்லாம் படங்கள் பெரிதாக ஓடுவதில்லை. ஒவ்வொரு படத்தின் கதையையும் கவனத்தோடுதான் தேர்ந்தெடுக்கிறார்; கடுமையாகத்தான் உழைக்கிறார். ஆனாலும் பலன் கடைப்பதில்லை.

கடைசி இரண்டு படங்களும்: கடைசியாக அவர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன், பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு பேருமே தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். ஆனால் தங்கலான் மோசமான தோல்வியை சந்தித்தது. தன்னுடைய ரசிகர்களுக்காகவே கமர்ஷியலாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று வீர தீர சூரன் செய்தார். ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை.
அப்செட்டில் ரசிகர்கள்: விக்ரம் நடிப்பில் கடைசியாக மெகா ஹிட்டான படம் எதுவென்று அவரது ரசிகர்களுக்கே மறந்து போயிருக்கும். அந்த அளவுக்கு சியானின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் தன்னம்பிக்கையை விடாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார். அந்தவகையில் அவர் நடிப்பில் அடுத்ததாக அவர் நான்கு படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
யார் இயக்குநர்கள்?: அந்தப் படங்களை முறையே, ஆனந்த் சங்கர், போடி ராஜ்குமார், விஷ்ணு எடவன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் இயக்கங்களில் நடிக்கிறார். பிரேம்குமாருடனும், மடோன் அஷ்வினுடனும் கமிட்டான படங்கள் ட்ராப்பாகிவிட்டன. இந்த நான்கு படங்களில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் படம் அநேகமாக மகான் திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் விக்ரமை வைத்து பத்து எண்றதுக்குள்ள படத்தை இயக்கிய விஜய் மில்டன் ஒரு பேட்டியில், "விக்ரமிடம் ஒருநாள் ட்ரைவர் பற்றிய கதை இருக்கிறது என சொன்னேன். அவரும் அடுத்த நாள் வீட்டுக்கு வந்து கதை சொன்னார். முதல் பாதியை சொல்லி முடித்ததும் பிடித்திருக்கிறது என சொல்லிவிட்டு உள்ளே சென்றார். கொஞ்ச நேரத்தில் விக்ரமின் மனைவி வந்தார். மில்டன் என்ன கதை சொன்னீங்க ரொம்ப பிடித்திருக்கிறது என குதிக்கிறாரே என கூறினார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. பிறகு இரண்டாவது பாதி சொன்னேன். அதுவும் அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications
