விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்.. அதிரடி காட்டிட்டாங்க

சென்னை: விஜய்யிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று சங்கீதா கடந்த டிசம்பர் மாதத்தில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.அந்த மனுவில் இருக்கும் விவரங்கள் எல்லாம் கடந்த பிப்ரவரி மாதம் கசிந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. அதனையடுத்து ஏப்ரலில் விசாரணைக்கு வந்த அந்த வழக்கு; இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவரான விஜய் இப்போது தமிழ்நாடு முதலமைச்சராகியிருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்த அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க அவரிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று கோரி சங்கீதா கடந்த டிசம்பர் மாதம் மனுத்தாக்கல் செய்தார்.

Vijay-Sangeetha Divorce Case Court Rejects Video Conferencing Request Hearing Adjourned to August 7
Photo Credit:

வெளியே கசிந்த விவரங்கள்: அவர் மனுத்தாக்கல் செய்த சில மாதங்களிலேயே மனுவில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் வெளியே கசிந்துவிட்டன. அதில், 'விஜய்க்கு இன்னொரு நடிகையுடன் தொடர்பிருக்கிறது. அவர்கள் இணைந்து அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்றார்கள். அந்தப் புகைப்படத்தையும் பகிர்ந்து நடிகை எனக்கும் என் பிள்ளைகளுக்கும் மன உளைச்சலை கொடுத்தார்' என பல குற்றச்சாட்டுக்களை வைத்திருந்தார்.

Also Read
பார்த்தாலே அப்படி தோணுது.. அங்கு பச்சை குத்தும்போது ரச்சிதா மகாலட்சுமி டபுள் மீனிங் பேச்சு
பார்த்தாலே அப்படி தோணுது.. அங்கு பச்சை குத்தும்போது ரச்சிதா மகாலட்சுமி டபுள் மீனிங் பேச்சு

விஜய், திரிஷா: அந்த மனுவில் இருந்த விவரங்கள் வெளியான சில நாட்களிலேயே விஜய் - திரிஷா ஒன்றாக ஒரு திருமணத்துக்கு சென்றார்கள். தேர்தல் ரிசல்ட் நாள் அன்று; விஜய் வெற்றி உறுதியானவுடன் முதல் ஆளாக திரிஷாதான் விஜய் வீட்டுக்கு சென்றார். அதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவில் முதல் இருக்கையும் அவருக்கு ஒதுக்கப்பட்டது. அஜித் அம்மா இறப்புக்கு இரண்டு பேரும் ஒன்றாகவே சென்றார்கள். இந்த விஷயங்கள் எல்லாம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் அண்ணா எதற்காக இப்படி செய்கிறாரோ என்று தவெக தொண்டர்களை ரொம்பவே வேதனைப்படுத்தியது.

வழக்கு விசாரணை : இவர்களது வழக்கு விசாரணை வாக்குப்பதிவு நடக்கும் சில நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் மாதம் நடந்தது. அப்போது இரண்டு தரப்புமே ஆஜராகவில்லை என தெரிகிறது. அதனையடுத்து ஜூன் 15ஆம் தேதி இந்த விசாரணை மீண்டும் நடக்கும் என அறிவித்து நீதிபதி ஒத்தி வைத்தார். அப்போது இரு தரப்பும் ஆஜராகுமா இல்லையா என்ற கேள்வியும் பலரிடம் எழுந்திருந்தது. விஜய் சி.எம் என்பதால் அவர் கண்டிப்பாக நேரில் ஆஜராகமாட்டார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

கோரிக்கை நிராகரிப்பு: எதிர்பார்த்தபடியே விஜய் நேரில் ஆஜராகவில்லை. அதேபோல் சங்கீதாவும் ஆஜராகவில்லை. மாறாக இரண்டு பேருமே வீடியோ கான்ஃப்ரசிங்கில் ஆஜராக கோரிக்கை வைத்தார்கள். தாங்கள் பிரபலமாக இருப்பதால் இப்படி ஒரு கோரிக்கையை வைப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் அவர்களது இரண்டு பேரின் கோரிக்கையையும் நிராகரித்த நீதிமன்றம், வீடியோ கான்ஃப்ரசிங்கிற்கு உரிய மெயில் ஐடி, ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு; வழக்கு விசாரணையை ஆகஸ்ட் ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

மேலும், விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பதால் அவரது பாதுகாப்பு, நிர்வாக பொறுப்புக்களை கருத்தில் கொண்டு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பது பற்றி நீதிமன்றம் பரிசீலித்து முடிவெடுக்கும் எனவும் தெரிகிறது. இந்த விஷயத்துக்கு எப்போது முடிவு வருமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X