பார்த்தாலே அப்படி தோணுது.. அங்கு பச்சை குத்தும்போது ரச்சிதா மகாலட்சுமி டபுள் மீனிங் பேச்சு

சென்னை: நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் ஜொலிப்பவர். அவரது நடிப்பில் கடைசியாக 99/66 திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் சுமாரான வரவேற்பே பெற்றது. அடுத்ததாக மெய் நிகரி, யூ ஆர் நெக்ஸ்ட் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் பச்சை குத்த சென்ற இடத்தில் விவகாரமாக ரச்சிதா பேசிய வீடியோ பலரிடமும் முக சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் டிவி சீரியல்களில் அறிமுகமாகி பிறகு பல சேனல்களில் பணியாற்றி சின்னத்திரையில் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி. சீரியலில் பிஸியாக இருந்தபோதே உடன் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை நீண்ட வருடங்கள் செல்லவில்லை. இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்கள். எப்படியாவது ரச்சிதாவோடு சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தினேஷ் செயல்பட்டாலும்; இந்தத் தரப்பிலிருந்து எந்த ஒத்துழைப்பும் வரவில்லை. பிரிவில் உறுதியாக நின்றார் நடிகை.

Rachitha Mahalakshmi s Tattoo Video Goes Viral After Her Double Meaning Remark Sparks Reactions
Photo Credit:

பிக்பாஸ் ரச்சிதா: சின்னத்திரையில் பிரபலமாக இருந்ததை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்தது. அதில் தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடினார். இடையே ராபர்ட் மாஸ்டர் அவரிடம் நெருங்கி பழக முயல; இவர் ரொம்பவே நாகரீகமாக அதனை கட்டுக்குள் வைத்திருந்தார். அது ரசிகர்களிடம் பெரிய ரெஸ்பான்ஸை பெற்றுக்கொடுத்தது. இருப்பினும் பாதியிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு திரைப்படங்களில் பிஸியாகிவிட்டார்.

Also Read
ரஜினி, கமல், அஜித் எல்லாம் அப்புறம்தான்.. சிவகார்த்திகேயன்தான்.. அந்த நடிகை இப்படி ஒரு எஸ்கே ரசிகையா?
ரஜினி, கமல், அஜித் எல்லாம் அப்புறம்தான்.. சிவகார்த்திகேயன்தான்.. அந்த நடிகை இப்படி ஒரு எஸ்கே ரசிகையா?

ஓவர் கிளாமர்: அந்தவகையில் ஃபயர் திரைப்படத்தில் நடித்தார். அதில் ஒரு பாடலில் அளவுக்கு மீறிய கிளாமர் காண்பிக்க திரை தீ பற்றி கொண்டது. அனைவருமே ஆச்சரியத்தோடு ரச்சிதாவை பார்த்தார்கள். ஏனெனில் சீரியலில் இருக்கும்போது அவர் சின்னத்திரை சாவித்திரி என்று கொண்டாடப்பட்டவர். அவரா இப்படி ஒரு கிளாமர் அவதாரம் எடுத்திருக்கிறார் என வாயடைத்து போனார்கள். இன்னும் சிலரோ, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் போல என்று விமர்சிக்கவும் செய்தார். அவர் அதற்கும் தகுந்த பதிலடியை கொடுத்திருந்தார்.

கமிட்டாகும் ரச்சிதா: அந்தப் படத்துக்கு பிறகு 99/66 திரைப்படத்தில் நடித்தார். அண்மையில் வெளியான அந்தப் படம் வந்ததும் தெரியவில்லை; போனதும் தெரியவில்லை. அடுத்தடுத்து அவர் படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதற்கிடையே சிங்கிளாக இருக்கும் அவர் எப்போது திருமணம் செய்துகொள்வார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. அவரோ; இனி எனது வாழ்க்கையில் திருமணமே கிடையாது என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி தொடர்பான வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது.

என்ன வீடியோ?: அதாவது டாட்டூக்கள் போட்டுக்கொள்வதில் ரொம்பவே பிரியம் உள்ளவர் ரச்சிதா. தன்னுடைய கை, மார்பு பகுதிகளில் எல்லாம் சில டாட்டுக்களை போட்டிருக்கிறார்.இப்போது தன்னுடைய தோள் பட்டையில் டாட்டூ போடுவதற்காக சென்றிருக்கிறார். அப்போது டாட்டூ போடும் இளைஞரிடம், 'ஒரு டாட்டூ வரைபடத்தை காண்பித்து; பார்த்தாலே போடணும்னு தோணுது.. நான் டாட்டூவ சொன்னேன்' என சொல்ல; அந்த இளைஞர் வெடித்து சிரித்துவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள், 'ஒருவரிடம் இப்படியா டபுள் மீனிங்கில் பேசுவது.. ரச்சிதா ரொம்ப மோசம்' என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X