ரஜினி, கமல், அஜித் எல்லாம் அப்புறம்தான்.. சிவகார்த்திகேயன்தான்.. அந்த நடிகை இப்படி ஒரு எஸ்கே ரசிகையா?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக சேயோன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை தாய் கிழவி இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கிவருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கமல்ஹாசன் தயாரித்துவருகிறார். படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்ததாக ஜூலை மாதம் தொடங்கவிருக்கிறதாம். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வெறித்தனமான ரசிகையாக ஒரு நடிகை இருக்கிறார்.

சினிமாவிலிருந்து விஜய் ஒதுங்கிய பிறகு அந்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். விஜய்யேகூட ஒரு நிகழ்ச்சியில், 'சிவா சின்ன குழந்தைகளை பிடித்துவிட்டார்' என்று பாராட்டியிருந்தார். அப்போதே புரிந்துகொள்ளலாம் சிவாவின் வளர்ச்சி அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டது என்பதை. அந்த ரூட்டில் மேலும் பலம் சேர்க்கும் விதமாக அமரன் திரைப்படம் மெகா ஹிட்டாகி மொத்தம் 300 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இதனால் அவரது மார்க்கெட்டு சரசரவென்று உயர்ந்தது.

Actress Teju Ashwini Chooses Sivakarthikeyan Over Rajinikanth Vijay and Ajith Fans Delighted
Photo Credit:

சிவகார்த்திகேயன் அண்ணா: இப்போது அவர் தனது ரசிகர்களிடமும், ரசிகைகளிடமும் அண்ணா என்ற ஸ்தானத்துக்கு சென்றுவிட்டார். விஜய்யை எப்படி அவரது ரசிகர்கள் கொண்டாடினார்களோ அதேபோல்தான் எஸ்கே ரசிகர்களும். அவரும் அதற்கு தகுந்தபடிதான் மேடைகளில் தன்னுடைய பேச்சை கட்டமைத்திருக்கிறார். சில சமயங்களில் அவரது பேச்சில் மற்ற நடிகர்களின் வாடையும் அடிப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

Also Read
GV Prakash Birthday - ஜிவி பிரகாஷ் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. இத்தனை கோடியா?
GV Prakash Birthday - ஜிவி பிரகாஷ் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. இத்தனை கோடியா?

சிம்பத்தியும் உண்டா?: முக்கியமாக, தனக்கு தொடர்ந்து பிரச்னை கொடுக்கிறார்கள் என்று அடிக்கடி மேடைகளில் அவர் சொல்வதை பார்த்தால்; அவர்களுக்கு எஸ்கேவுக்கு பிரச்னை கொடுப்பது மட்டும்தான் வேலையா?.. இப்படி சொல்பவர் ஏன் பெயரை வெளியே சொல்லமாட்டேன் என்கிறார் என்றும் கேள்விகள் பிறந்தன. இதுகுறித்து செய்தியாளர்கள்கூட ஒருமுறை எஸ்கேவிடமே கேட்டார்கள். அதற்கு அவர் தெளிவான பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டார். ஆனால் இந்த விஷயம்கூட அவருக்கு இளம் ரசிகர்கள், ரசிகைகள் மத்தியில் சிம்பத்தியை உண்டு செய்திருக்கலாம் எனவும் அவரது எதிர் தரப்பினர் வாதமாக இருக்கிறது.

நடிகை தேஜு அஷ்வினி: இந்நிலையில் திரைத்துறையிலிருந்து ஒரு நடிகை சிவகார்த்திகேயனின் வெறித்தனமான ரசிகையாக இருக்கிறார். மூன்றாம் கண் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை தேஜூ அஷ்வினிதான் அவர். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ரஜினி, கமல், விஜய், அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பெயரை ஒவ்வொன்றாக சொல்லி அதற்கு எதிர் தரப்பில் சிவாவின் பெயரை சொல்லி யாரை பிடிக்கும் என கேட்டதற்கு, அனைத்துக்குமே சிவகார்த்திகேயன்தான் என்று பதிலளித்தார். நடிகை தேஜூ சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு பெரிய ரசிகையாக இருப்பதை பார்த்து எஸ்கே ரசிகர்களே மிரண்டு போயிருக்கிறார்கள்.

மூன்றாம் கண்: தேஜூ அஷ்வினியை பொறுத்தவரை சூப்பர் ஹீரோ, காத்துவாக்குல இரண்டு காதல், என்ன சொல்லப்போகிறாய் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது அவர் மூன்றாம் கண் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அநதப் படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து இன்னும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் கரியரை பொறுத்தவரை; கடைசியாக அவர் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்போடு வந்த பராசக்தி ஹிட்டாகவில்லை. எனவே அந்தப் படத்தில் பெற்ற அடிக்கு சேயோன் படம் மருந்திடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X