விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. கிருத்திகா உதயநிதிதான் இயக்குநராம்.. வேற லெவலா இருக்குமே பாஸ்
சென்னை: தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஃபேமஸான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இடையில் வில்லன் ரோல் மட்டும் செய்துகொண்டிருந்த அவர்; தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த மகாராஜா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படம் வெளியாகவிருக்கிறது.
விஜய் சேதுபதி மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக தன்னை இந்திய அளவில் நிலை நிறுத்தியிருக்கிறார். அதேசமயம் ஏகப்பட்ட கஷ்டங்களை சினிமாவில் சந்தித்தவர் அவர். சினிமாவுக்கு உண்மையாக உழைத்ததால் அவரையும் சினிமா கைவிடவில்லை. தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்த அவர்; திடீரென வில்லன் ரோல்களிலும், கெஸ்ட் ரோல்களிலும் அதிகம் நடிக்க ஆரம்பித்தார். விக்ரம், பேட்ட, மாஸ்டர், ஜவான் என வரிசையாக வில்லன் ரோல் ஏற்றார்.

மீண்டும் ஹீரோ: ஆனால் அவர் தொடர்ந்து ஹீரோ ரோல்களை தவிர்த்து வந்தது அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி மீண்டும் ஹீரோவாக நடிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார்கள். அதனை ஏற்று நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50ஆவது படமாக மகாராஜா படத்தில் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
வெப் சீரிஸிலும்: இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் படத்துக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். அதனைத் தொடர்ந்து நடித்த ஏஸ் படம் சுமார் ரகம்தான். கடைசியாக அவரது நடிப்பில் காந்தி டாக்ஸ் என்ற திரைப்படமும், முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸும் வெளியாகின. இரண்டுமே சுமார் ஹிட்டைத்தான் பெற்றன. ஆனால் வழக்கம்போல் சேதுவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பில் ட்ரெய்ன்: அடுத்ததாக அவர் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ட்ரெய்ன் படம் வரவிருக்கிறது. கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார். முதன்முறையாக மிஷ்கினுடன் சேது இணைந்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கிறது. கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் இப்படம் கண்டிப்பாக கோலிவுட்டில் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேதுவின் புதிய படம்: விஜய் சேதுபதியிடம் இப்போது எக்கச்சக்க படங்கள் கைவசம் இருக்கின்றன. அந்தவகையில் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இயக்குநரும், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகாவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அந்தப் படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்கும் என்றும்; மிக விரைவில் முறைப்படி அறிவிப்பு வரும் என்றும் கோலிவுட் பட்சிகள் சொல்கின்றன.


Click it and Unblock the Notifications
