விஜய் வீட்டு பெட் ரூமில் நடந்தது.. ஒன்னும் சொல்ல முடியாம வெளியே வருவாராம்.. உடைக்கப்பட்ட சீக்ரெட்!

சென்னை: தமிழ்நாட்டில் தனக்கென தனி இடத்தை சினிமா மூலம் பிடித்தவர் விஜய். அந்த பலத்தோடு அரசியலுக்கு வந்து; நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகவும் ஆகிவிட்டார். இனிமேல் குறைந்தபட்சம் இந்த மாநிலத்தை 20 வருடங்களுக்கு அவர்தான் ஆள்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்நிலையில் அவர் குறித்த உறுதிப்படுத்தப்பட்ட சீக்ரெட் வெளியாகியிருக்கிறது.

சினிமாவில் தந்தையின் துணையோடுதான் விஜய் அறிமுகமானார். அதை வைத்தே அவரை பலரும் கிண்டல் அடித்ததுண்டு. ஆனால் இப்போதோ அவருக்கு பெரும்பான்மையான தமிழ்நாடே துணையாக இருக்கிறது. அந்த துணையின் தயவில்தான் இன்று அவர் மாநிலத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். இதுவரை ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு அரியணைக்கு ஏறியிருக்கிறார் அவர். அதை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள் என்பதுதான் உண்மை.

Vijay s Neighbour Reveals Secret Trick to Make Him Step Out Of His House
Photo Credit:

எப்படி இருக்கு செயல்பாடு?: முதலமைச்சரானதிலிருந்து அவரது செயல்பாடு ஒவ்வொன்றும் உன்னிப்பாகவே பலரால் கவனிக்கப்படுகிறது. அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு செயல்படுகிறார். இருந்தாலும் அனுபவமின்மை உள்ளிட்டவைகள் எல்லாம் அவருக்கு கொஞ்சம் அழுத்தத்தை கொடுக்கலாம். அதன் காரணமாக ஆறு மாதங்கள் எதுவும் கேள்வி கேட்க வேண்டாம் என்பது அவருடைய ஆதரவாளர்களின் நிலைப்பாடு.

Also Read
சூர்யா இதெல்லாம் பார்க்க மாட்டாரா?.. மமிதா பைஜுவுக்கு நேர்ந்த அவமானம்.. சாடிய சனம் ஷெட்டி!
சூர்யா இதெல்லாம் பார்க்க மாட்டாரா?.. மமிதா பைஜுவுக்கு நேர்ந்த அவமானம்.. சாடிய சனம் ஷெட்டி!

அமைதி காக்கும் விஜய்: ஆனால் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேற்று அவர் பதிலளிக்காமல் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே நிழல் முதலமைச்சராக ஆதவ்தான் செயல்படுகிறார் என்று விமர்சனங்கள் வந்தன. இப்போது அவர் பதிலளித்திருப்பது அந்த விமர்சனங்களுக்கு சலங்கை கட்டிவிட்டது போல் ஆகிவிட்டது என்பதும் ஒருவகையில் உண்மை. இருப்பினும் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் ஐந்து வருட ஆட்சியை விஜய் நிறைவு செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நேரில் வந்த விஜய்: அவரை நேரில் பார்ப்பதற்கு அவரது ரசிகர்கள் தவம் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த தவத்தை தீர்த்துக்கொள்ள போய்த்தானே கரூரில் 41 பேர் இறந்தார்கள். இனிமேலும் அதுமாதிரி நடக்காமல் விஜய் பார்த்துக்கொள்வார் என்று நம்புவோமாக. சமீபத்தில் சென்னையில் காரில் சென்றுகொண்டிருந்தபோது; வெயிலில் தன்னை பார்க்க காத்திருந்த மக்களை காரிலிருந்து இறங்கி அந்து சில நிமிடங்கள் சந்தித்துவிட்டு சென்றார். இந்நிலையில் விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்றில் விஜய்யை அவர்கள் பார்க்க வைத்திருக்கும் சீக்ரெட்டை ஓபன் செய்திருக்கிறார்.

பக்கத்து வீட்டுக்காரர் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "விஜய்க்கு ஷூட்டிங் இல்லை என்றால் அவரது கேரவன் வண்டி வீட்டில் நிற்கும். அந்த வண்டி நின்றால் அவர் வீட்டில் இருக்கிறார் என்று அர்த்தம். விஜய்யின் வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் சின்ன காம்பவுண்ட் சுவர் மட்டும்தான் இருக்கும். அவரை நாங்கள் வெளியே வர வைக்க வேண்டும் என்றால், எங்கள் கிச்சனில் சின்ன சட்டியில் கொஞ்சம் எண்ணெய்யை வைத்துவிட்டு; மிளகாய் பொடியை போட்டால் கார நெடி ஒன்று உருவாகும். அது நேராக விஜய்யின் பெட்ரூம் பக்கம்தான் செல்லும்.

வெளியே வருவார்: உடனே விஜய் இருமிக்கொண்டே வெளியே வந்து, 'ஏன் இப்படி சமைக்கிறீர்கள்' என கேட்பார். அமைதியாகத்தான் கேட்பார். கேட்டுவிட்டு போய்விடுவார். ஆனால் இதை நாங்கள் அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே செய்கிறோம் என்பது அவருக்கு தெரியாது. இத்தனை நாட்கள் இதனை வெளியே சொன்னது இல்லை. அவர் நல்ல மனிதராக இருக்கிறார். அதனால் சொல்லலாம்.

பிறகு அடிக்கடி அதே மாதிரி செய்ததால் சின்ன சின்ன சஞ்சலங்கள் எல்லாம் வந்து போயிருக்கின்றன. அவர் இங்கிருப்பவர்களை பக்கத்து வீட்டுக்காரர்கள் மாதிரியே பார்க்கமாட்டார்.யாருக்கும் எந்த தொந்தரவும் தரமாட்டார். யாரை பார்த்தாலும் நின்று பேசிவிட்டு செல்வார்" என்றார்.

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X