காசு கேட்பேனு ஃபோனைக்கூட எடுக்கமாட்றாங்க.. நண்பர்கள் பற்றி விஷால் ஓபன் டாக்
சென்னை: விஷால் தமிழில் பல வருடங்களாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் விஷாலின் சினிமா கரியரிலேயே இந்தப் படம்தான் நூறு கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் ஹரியின் இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துவருகிறார்.
செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்
எஸ்.ஜே.சூர்யா: படத்தின் ஹைலைட்டாக இருந்தது நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாதான். வயதான எஸ்.ஜே.சூர்யாவாகவும், இள வயது எஸ்.ஜே.சூர்யாவாகவும் தனது நடிப்பில் வேரியேஷன் காண்பித்து அசத்தியிருக்கிறார் படத்தில். முக்கியமாக இரண்டு எஸ்.ஜே.சூர்யாக்களும் ஃபோனில் பேசிக்கொள்ளும் காட்சியிலும், சில்க் ஸ்மிதா காட்சியிலும் சூர்யாவின் நடிப்பு பட்டாசு ரகம். அவர் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் கைத்தட்டி என்ஜாய் செய்தனர். படம் கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
Simbu - கொரோனா குமாரிலிருந்து விலகிய சிம்பு.. புதிய ஹீரோ யார் தெரியுமா?
அடுத்த படம்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று நம்பப்படுகிறது.
நோ திருமணம்: விஷாலுக்கு 40 வயது நெருங்கிவிட்டது. ஆனாலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இடையில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் அவருக்கு நடந்தது. ஆனால் அது திருமணம்வரை செல்லவில்லை. மேலும் நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்கிடையே அவர் தன்னால் முடிந்த உதவிகளை ஏழ்மையில் இருப்பவர்களுக்கு செய்வதுவருவது குறிப்பிடத்தக்கது.
வரலட்சுமி சரத்குமாருக்கு என்னம்மா லிப் கிஸ் அடிக்கிறாரு.. நிச்சயதார்த்த வீடியோவை பார்த்தீங்களா?
ஃபோன் எடுக்கமாட்டாங்க: இந்நிலையில் சென்னை லயன்ஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் விஷால். அப்போது பேசிய அவர், “லயன்ஸ் கிளப் நிறைய நல்ல விஷயங்களை செய்துவருகிறது. அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். முக்கியமாக பத்து ரூபாய்க்கு ப்ளட் டெஸ்ட் எடுப்பதெல்லாம் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு என் முகம் பயன்படட்டும் என்றுதான் இந்த முகத்தை வைத்துக்கொண்டு வந்தேன்.
லயன்ஸ் கிளப் செய்யும் உதவிகள் எனக்கு இன்ஸ்பிரேஷனாகத்தான் இருக்கும். எனது நண்பர்களுக்கு நான் ஃபோன் செய்தால், ஐயோ இவன் ட்ரஸ்ட்டுக்கு காசு கேப்பானே என்று நினைத்துக்கொண்டு ஃபோனைகூட எடுக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள் ஒருநாளில் ஒன்றரை லட்சம் ரூபாயை திரட்டும் அளவுக்கு இருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.


Click it and Unblock the Notifications











