விஜய்யை விஜய்னு கூப்பிட்டால் என்ன தவறு?.. சரியான வன்மம்.. விஷ்ணு விஷால் அதிரடி

சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் கட்டா குஸ்தி 2 திரைப்படம் ஜூலை மூன்றாம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனையொட்டி தீவிரமான ப்ரோமோஷன்களில் ஈடுபட்டிருக்கிறார் விஷ்ணு விஷால். அந்தவகையில் ஒரு பேட்டியின்போது ரஜினிகாந்த் மற்றும் விஜய் குறித்து பேசிய விஷயம் விவாதமானது. இந்நிலையில் அதுகுறித்து அதிரடியான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால்; கோலிவுட்டின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர். ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற அங்கீகாரமோ இடமோ இன்னும் அவருக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் தொடர்ந்து அவர் படங்களில் சின்சியராக நடித்துவருகிறார். கடைசியாக வெளியான ஆர்யன் திரைப்படம் தோல்வியடைந்த சூழலில்; இப்போது கட்டா குஸ்தி 2 படத்தில் நடித்திருக்கிறார்.

Vishnu Vishal Breaks Silence on Rajinikanth Vijay Remark Controversy
Photo Credit:

சில நாட்களில் ரிலீஸ்: அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வரா லட்சுமி நடித்திருக்கிறார். ஏற்கனவே இதன் முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே இந்தப் பாகத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. படமானது ஜூலை 3ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி தீவிரமான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள் படக்குழுவினர்.

Also Read
பாக்யராஜுக்கு அந்த உதவியை செய்ய முடியலையே.. ரஜினிகாந்த் வருத்தம்.. என்ன நடந்தது தெரியுமா?
பாக்யராஜுக்கு அந்த உதவியை செய்ய முடியலையே.. ரஜினிகாந்த் வருத்தம்.. என்ன நடந்தது தெரியுமா?

விஷ்ணு விஷால் பேட்டி: அப்படி ஒரு பேட்டியளித்த விஷ்ணு விஷால், "சோஷியல் மீடியாவின் பயன்பாடு இன்று மிக மிக அதிகமாகவும், சமயங்களில் ஆபத்தானதாகவும் மாறியிருக்கிறது. தலைவரே (ரஜினி) மைக்கை பிடித்துக்கொண்டு, 'எனக்கும் விஜய்க்கும் ஒன்றும் இல்லை' என விளக்கம் சொல்லும் நிலைமைதான் இருக்கிறது. அப்படிப்பட்ட விசித்திரமான சூழலில்தான் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு: தலைவரே கூட நான்கு நாட்கள் எந்தப் பதிவும் போடாமல் அமைதியாக இருந்தால்கூட அவரை பற்றி ஏதோ ஒரு தவறான விஷயத்தை கிளப்பி சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாக்கிவிடுகிறார்கள். இதனால் அவரே வேறு வழியில்லாமல் நான் ஏன் இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்று நொந்து போய் சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது" என்றிருந்தார். அவர் அப்படி பேசியதற்கு, 'எப்படி நீங்கள் ரஜினியை தலைவர் என்று சொல்லிவிட்டு; விஜய்யை மட்டும் பெயர் சொல்லி அழைக்கலாம்' என விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.

விஷ்ணு விஷால் அதிரடி: இந்நிலையில் இதுகுறித்து பேசிய விஷ்ணு விஷால், "விஜய்யை பற்றி ரஜினி என்ன பேசிருக்கார் என்பதைத்தான் நான் சொல்லியிருக்கிறேன். ரஜினியுடம் விஜய்யை விஜய் என்றுதான் சொல்லியிருக்கிறார். நிறைய பேர், 'ரஜினியை மட்டும் ஏன் தலைவர் என்று கூப்பிட்டுவிட்டு; விஜய்யை பெயர் சொல்லி அழைத்தீர்கள்' என கேட்கிறார்கள். ரஜினி விஜய் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதைத்தானே நானும் சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு இருக்கிறது. இது நடக்கும்தான். எனக்கு இதுதான் முதன்முறை. யாரையும் கஷ்டப்படுத்த நான் அப்படி பேசவில்லை. சோஷியல் மீடியாக்களில் தென்படும் வன்மம் பற்றித்தான் பேசினேன். அதில் இருந்து நான் பின் வாங்கப்போவதில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X