பாக்யராஜுக்கு அந்த உதவியை செய்ய முடியலையே.. ரஜினிகாந்த் வருத்தம்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: இயக்குநர் பாக்யராஜ் சில நாட்களுக்கு முன்பு நடந்த குஷ்புவின் மகள் திருமணத்தில்கூட கலந்துகொண்டார். நன்றாக இருந்த அவருக்கு; நேற்று முன்தினம் காலை திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி அவரது உயிரை எடுத்துவிட்டது. இதனையடுத்து நேற்று பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் பாக்யராஜ் விஷயத்தில் ரஜினியை விமர்சித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ்; சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனையடுத்து அவர் இயக்கிய தூறல் நின்னுப்போச்சு, தாவணிக் கனவுகள், முந்தானை முடிச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், மௌன கீதங்கள், ஒரு கை ஓசை, ராசுக்குட்டி, சின்ன வீடு, ஆராரரோ ஆரிரரோ, சுந்தர காண்டம் என பல படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன.

சக்சஸ்ஃபுல் ஹீரோ: அவர் இயக்குநராக மட்டுமின்றி ஹீரோவாகவும் ஜொலித்தவர். தன்னுடைய புதிய வார்ப்புகள் படத்திலேயே அவரை ஹீரோவாக்கிவிட்டார் பாரதிராஜா. இதனால் அடுத்தடுத்து தான் இயக்கிய படங்களில் பாக்யராஜே ஹீரோவாக நடித்தார். எதார்த்தமான நடிப்பு, இயல்பான உடல்மொழி எல்லாம் சேர்ந்து அவரை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது. ஒருகட்டத்தில் ரஜினிகாந்த்தின் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலும் செய்துகொடுத்தார்.
பாக்யராஜுக்கு நெஞ்சு வலி: இப்படி செம பிஸியாக இருந்த அவர் ஒருகட்டத்தில் இயக்கத்திலிருந்து ஒதுங்கி குணசித்திர நடிகராக ஜொலித்தார். அதிலும் அவர் தன்னுடைய முத்திரியை பலமாகவே குத்தினார். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு நடந்த குஷ்பு மகள் அவந்திகாவின் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு வந்த அவர்; நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதனை முடித்துவிட்டு வந்தவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.
உயிரிழந்த பாக்யராஜ்: உடனடியாக பதறிய குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் எந்த பலனும் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அவருக்கு வயது 73 ஆகும். பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய், நடிகர்கள் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் எல்லாம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் பாக்யராஜ் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து ரஜினியை விமர்சித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அதாவது சில வருடங்களுக்கு முன்பு பாக்யராஜ் கொடுத்த பேட்டி ஒன்றில், "வேட்டிய மடிச்சு கட்டு திரைப்பட்த்தில் ரஜினியை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அதற்காக அவரிடம் சென்று கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். எனது மனதுக்குள் சின்ன ஃபீலிங் இருக்கத்தான் செய்கிறது.
அவரே சொன்னார்: ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஏனெனில் அவர் கேட்டவுடன் நான் சிகப்பு மனிதன் படத்தில் கெஸ்ட் ரோல் செய்தேன். அவர் என்னுடைய படத்தில் நடிக்கமாட்டேன் என சொல்லிய பிறகு அவரை நான் வற்புறுத்த விரும்பவில்லை. பிறகு அவரே ஒரு மேடையில், 'பாக்யராஜ் வந்து கேட்டபோது நான் செய்திருக்க வேண்டும். அதை ஒத்துக்கொண்டால் எல்லோரும் வந்து கேட்பார்களே என்றுதான் செய்யவில்லை' என கூறினார்" என்றார். இதனை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ப்ளூ சட்டை மாறன் ரஜினியை கடுமையாக அட்டாக் செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications
