விஜய் சாருடன் நடித்த சீனை தூக்கிட்டாங்க.. இனிமே எப்படி அவரு கூட நடிப்பேன்? கதறும் பிரபல நடிகை!

சென்னை: ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் வேளையில், அதில் நடித்த பிரபல சீரியல் நடிகை ஆனந்தி
படத்தில் தான் நடித்த காட்சிகள் மொத்தமாக சீனையும் தூக்கிட்டதாக மனமுடைந்து பேசி உள்ளார்.

ஜீ தமிழின் ஹிட் சீரியலான 'வீரா'-வில் ராணி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஆனந்தி, சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராமில், நான் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறேன், அதில் பல காட்சிகள் டெலிட் ஆகியிருக்கின்றன. அதற்காக நான் என்றைக்குமே வருத்தப்பட்டதே இல்லை. ஆனால், இந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நான் நடித்த சீன் டெலிட் ஆனதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு

Jana nayagan Anandhi CM Vijaym

நடிகை ஆனந்தி: கடந்த இரண்டு வருடங்களாக நான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அப்படிப்பட்ட சூழலில் நான் கம்பேக் கொடுத்த படம்தான் இந்த 'ஜன நாயகன்'. தளபதி விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்ற ஒரே ஆசையில்தான் நான் சினிமாவிற்கே வந்தேன். அதுதான் என் கனவாக இருந்தது. அவரோட காம்பினேஷனில் நடித்திருந்ததால், படம் எப்போது வரும் என்று ஒரு வருஷத்திற்கும் மேலாக ஆசையோடு காத்துக்கொண்டிருந்தேன். நேற்று மிகவும் சந்தோஷமாகத் தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றேன். விஜய் சாருடன் நான் வரும் காட்சியைப் திரையில் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையில் இருந்தேன். ஆனால், அந்த சீனை மொத்தமாக டெலிட் செய்துவிட்டார்கள் கண்ணீர் விட்டு பேசி உள்ளார்.

Also Read
ரெட்டை குடுமில பாப்பா லுக்கு.. ஆனா பண்ற வேலை? கிளாமர் உடையில் கிறங்கவைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!
ரெட்டை குடுமில பாப்பா லுக்கு.. ஆனா பண்ற வேலை? கிளாமர் உடையில் கிறங்கவைக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி!

இனிமேல் நடிக்க முடியாதே: படம் ரொம்ப சூப்பராக இருக்கு, எல்லாரும் போய் பாருங்கள், அடுத்து அவர் படங்களில் நடிக்கிறார் என்றால், மீண்டும் எப்போதாவது முயன்று அவரோடு சேர்ந்து நடித்துவிடலாம். ஆனால், இதுதான் அவருடைய கடைசி படமாச்சே, இனிமேல் நான் எப்படி அவருடன் சேர்ந்து நடிப்பேன்? எனக் கதறி அழுதுள்ளார். ஒருபக்கம் நடிகை ஆனந்தியின் இந்த வீடியோ ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபக்கம் 'ஜன நாயகன்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டி உள்ளது.நேற்று திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் உலகளவில் ஒரே நாளில் ₹78 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. விரைவில் இப்படம் ₹100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X