காட்டுக்குள்ளே வைப் செய்யும் சுருட்டை முடி தேவதை.. அனுபமா பரமேஸ்வரனின் கியூட் போட்டோஷூட்!
சென்னை: கோலி குண்டு கண்ணு, கோவைப்பழ உதடு எனப் பாட்டுப் பாடும் அளவிற்குப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் பேரழகுடன் திரையுலகில் வலம் வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அதைத்தொடர்ந்து தள்ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன், லாக்டவுன் உள்பட பல தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
அனுபமா பரமேஸ்வரன்: தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன், அடுத்ததாக இந்தித் திரையுலகிலும் தடம் பதிக்க உள்ளார். புதிய சைக்காலஜிக்கல் த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் அவர் இந்தியில் முதன்முறையாக அறிமுகமாக உள்ளார். இந்தத் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அவரது ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

துருவ் விக்ரம் காதல் வதந்தி: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பைசன் திரைப்படத்தில் துருவ் விக்ரமுடன் இணைந்து அனுபமா நடித்து இருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர்களது ஜோடிப் பொருத்தம் நன்றாக இருந்தது. இருவரும் படத்தின் ப்ரோமோஷனுக்கு ஜோடியாக வலம் வந்ததால், இருவரும் காதலிப்பதாகவும், டேட்டிங் செய்வதாகவும் இணையத்தில் பலவிதமான வதந்திகள் பரவின. ஆனால், இந்த வதந்திகளைப் பற்றி எதையும் கண்டுகொள்ளாமல் முழுக்க முழுக்கத் தனது நடிப்பின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் அனுபமா பரமேஸ்வரன்.

இன்ஸ்டாகிராம் க்ளிக்ஸ்: காதல் கிசுகிசுக்களுக்கு மத்தியில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜாலியாக வைப் செய்யும் சில புதிய புகைப்படங்களை அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்துள்ளார். பச்சைப் பசேல் என்ற காடுகளுக்கு இடையே, அதற்குப் பொருத்தமாக வெளிர் மஞ்சள் நிற ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து தேவதை போஸ் கொடுத்துள்ளார். செடிகளுக்கு நடுவேபூக்களை ரசித்தபடி ஒரு போஸும், மரத்தைத் தொட்டபடி தனது டிரேட் மார்க் சுருட்டை முடியைப் பறக்கவிட்டு வசீகரப் புன்னகையோடு கொடுத்திருக்கும் போஸ் நெட்டிசன்களை சுண்டி இழுத்துள்ளது. இந்த போட்டோக்களை பார்த்த இளசுகள் நடிகை அனுபமாவிற்கு தங்களது இதயத்தை பதிவிட்டு கமெண்ட் பாக்சை நிரப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
